AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

RR vs DC : கே.எல்.ராகுல் அதிரடி – டெல்லி கேப்பிடல்ஸ் அபார வெற்றி

IPL 2026 : ஐபிஎல் 2026 சீசனில் 62வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த நிலையில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 193 ரன்கள் எடுத்தது. 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

RR vs DC :  கே.எல்.ராகுல் அதிரடி  – டெல்லி கேப்பிடல்ஸ் அபார வெற்றி
வைபவ் சூர்யவன்ஷி - கே.எல்.ராகுல்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 17 May 2026 23:42 PM IST

ஐபிஎல் 2026 சீசனில் 62வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களின் அதிரடி ஆட்டம் காரணமாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 194 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க அதனைத் தொடர்ந்து வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜுரேல், ரியான் பராக் அதிரடியாக ஆடினர்.

வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் ராஜஸ்தான் அணிக்கு ஒரு வலுவான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். அவர் 3 சிக்சர், 5 பவுண்டரிகள் என 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து ஜுரேல் 53 ரன்களும் ரியான் பராக் 26 பந்துகளில் 51 ரன்களும் என டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.

இதையு் படிக்க : IPL 2026: இன்னும் 11 போட்டிகள் மட்டுமே.. பிளே ஆஃப் செல்ல எந்த அணிகளுக்கு வாய்ப்பு?

அவருக்கு அடுத்த வந்த வீரர்கள் பெரிய அளவில் சோபிக்காததால் ராஜஸ்தான் அணியால் 200 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியவில்லை. குறிப்பாக மிடெ்செல் ஸ்டார்க் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகலை வீழ்த்தி ராஜஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தார். இன்னிங்ஸின் இறுதி கட்டங்களில், டெல்லி அணியின் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பிற பந்துவீச்சாளர்கள் ராஜஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்ஸ்மேன்கள் அதிரடி

 

இதனையடுத்து டெல்லி அணி 194 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது. இதனையடுத்து அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் போரல் மற்றும் கே.எல்.ராகுல் சிறப்பான துவக்கம் தந்தனர். இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இந்த நிலையில் அபிஷேக் போரல் பிரிஜேஷ் சர்மா பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதையும் படிக்க : IND vs AFG: காயத்தால் தவிக்கும் இந்திய அணி.. பிரின்ஸ் யாதவை களமிறக்க திட்டம்!

கே.எல்.ராகுல் அவுட்டானதும் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இருப்பினும் கடைசி கட்டத்தில் அக்சர் படேல் சரிவிலிருந்து மீட்டார். அதனைத் தொடர்ந்து டேவிட் மில்லர் மற்றும் அஷுடோஸ் சர்மா இணைந்து அந்த அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி பெற்றது.

Follow Us