AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் இறுதி போட்டி – களமிறங்கும் தோனி? அஸ்வின் சொன்ன ஹேப்பி நியூஸ்!

Dhoni Comeback Chance : ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் எம்எஸ் தோனி, விரைவில் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னையில் இறுதி போட்டி – களமிறங்கும் தோனி? அஸ்வின் சொன்ன ஹேப்பி நியூஸ்!
எம்.எஸ்.தோனி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 17 May 2026 15:46 PM IST

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் எம்எஸ் தோனி, விரைவில் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ளார். இந்த தொடரில் சிஎஸ்கே அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆனால், அணியின் நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி இதுவரை ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை. இது அவரது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றமாக அமைந்தது. கால் தசை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த ஐபிஎல் தொடர் தான் தோனியின் கடைசி ஐபிஎல்லாக இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில் தோனி கடைசி வரை களமிறங்காமலே ஒய்வு பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அவர் முன்பு ஒரு பேட்டியில் எனது கடைசி ஐபிஎல் போட்டி சேப்பாக்கத்தில் தான் இருக்கும் என தெரிவித்திருந்தார். இதனால் சென்னையில் நடைபெறும் போட்டியில் களமிறங்குவார் என்றும் அது அவரது கடைசி போட்டியாக இருக்கும் என்றும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

இதையும் படிக்க : IND vs AFG: காயத்தால் தவிக்கும் இந்திய அணி.. பிரின்ஸ் யாதவை களமிறக்க திட்டம்!

சென்னையில் இறுதி போட்டி – களமிறங்கும் தோனி?

இதற்கிடையில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மே 18, 2026 சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் போட்டியில் தோனி விளையாட அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இது தான் இந்த சீசனில் சென்னையில் சிஎஸ்கே விளையாடும் கடைசி லீக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் தனது யூடியூப் சேனலில் இந்த போட்டியில் தோனி விளையாட அதிக வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், வேகப்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ளும் திறன் தோனியிடம் இருக்கிறது. கடந்த 3 போட்டிகளாகவே தோனி விளையாட அதிக ஆர்வமாக இருந்தார். சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்கினால் அது அவருக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்றார்.

இதையும் படிக்க : Hardik Pandya: ஐபிஎல் 2026 சீசனில் காயம்.. மே 22ம் தேதி திருமணம்.. புது சர்ச்சையில் சிக்கும் ஹர்திக் பாண்ட்யா?

இதன் ஒரு பகுதியாக சிஎஸ்கேவின் பிளே ஆஃப் கனவு கேள்விக்குறியாக மாறியுள்ளது. கடந்த எல்எஸ்ஜி அணிக்கு எதிராக சிஎஸ்கே அணியின் தோல்வி அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இதனால் புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் இருந்த அந்த அணி 6வது இடத்துக்கு சென்றது. இதனால் அந்த அணியின் பிளே ஆஃபிற்கு செல்ல மற்ற அணிகளை நம்பியிருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இனி வரும் போட்டிகளில் ஒன்றில் தோற்றால் கூட அந்த அணிக்கு பெரும்  பாதிப்பை ஏற்படுத்தும்.

Follow Us