AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Team India: இந்திய அணிக்கு சஞ்சுவை கேப்டனாக கொண்டு வாங்க.. முன்னாள் பயிற்சியாளர் வலுவான குரல்!

Sanju Samson T20 Captain: சஞ்சு சாம்சனுக்கு ஆரம்பத்திலிருந்தே திறமை இருந்ததை கண்டறிந்தோம். சமீபகாலமாக சஞ்சு சாம்சன் மிகச்சிறந்த ஃபார்மில் இருந்து வருகிறார். மேலும், அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் சஞ்சு இன்னும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

Team India: இந்திய அணிக்கு சஞ்சுவை கேப்டனாக கொண்டு வாங்க.. முன்னாள் பயிற்சியாளர் வலுவான குரல்!
சஞ்சு சாம்சன்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 May 2026 16:58 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) புதிய டி20 கேப்டன் குறித்த விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. சூர்யகுமார் யாதவின் தனிப்பட்ட செயல்திறன் காரணமாக, அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்குவது குறித்து பிசிசிஐ பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதில், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் (Sanju Samson) ஆகியோர் புதிய டி20 கேப்டன் பதவிக்கான வலுவான போட்டியாளர்களாக திகழ்கிறார்கள். இதற்கிடையில், முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரரும், முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, சஞ்சு சாம்சனை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்.

அதில், சஞ்சு சாம்சனுக்கு ஆரம்பத்திலிருந்தே திறமை இருந்ததை கண்டறிந்தோம். சமீபகாலமாக சஞ்சு சாம்சன் மிகச்சிறந்த ஃபார்மில் இருந்து வருகிறார். மேலும், அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் சஞ்சு இன்னும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார். இதற்கு முன்பு பல சீசன்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்திய அனுபவம் உள்ளதால், டி20 கேப்டன் பதவிக்கு சஞ்சு சாம்சன் ஒரு வலுவான போட்டியாளர் என்றார்.

ALSO READ: OG இஸ் பேக்..? ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்.. முக்கிய பவுலரை களமிறக்கும் இந்தியா?

ரவி சாஸ்திரி கூறியது என்ன..? முழுமையான விவரம்:

ஐசிசி ரிவியூவில் சஞ்சனா கணேசனிடம் பேசிய ரவி சாஸ்திரி, ”சூர்யகுமார் யாதவின் செயல்பாட்டைப் பொறுத்து, அடுத்த டி20 உலகக் கோப்பைக்குள் (2028) இந்தியா ஒரு புதிய கேப்டனை கண்டறிவது முக்கியம். ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் தலைமை தாங்கிய சஞ்சு சாம்சன், கேப்டன் பதவிக்கான ஒரு வலுவான போட்டியாளராகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். இந்திய அணியில் சஞ்சுவின் இடம் உறுதியானது. அவர் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கி, மிகவும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பேட்ஸ்மேன். எனவே, இது வெறும் ஆரம்பம் தான் அடுத்த 2-3 ஆண்டுகளில் சஞ்சுவிடமிருந்து நீங்கள் இன்னும் பலவற்றைக் காண்பீர்கள் என்றும் நான் நினைக்கிறேன்.” என்றார்.

ALSO READ: இது நடந்தால் கிரிக்கெட்டில் ஓய்வு.. எதிர்காலம் குறித்து பேசிய கோலி சொன்ன ஷாக் விஷயம்!

சஞ்சு சாம்சனின் ஆட்டத்தில் நிலைத்தன்மை இனி ஒரு பிரச்சினை இல்லை என தெரிவித்த ரவி சாஸ்திரி, ” சஞ்சு சாம்சன் தனது நிலைத்தன்மை குறித்த கேள்விகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்று நான் நினைக்கிறேன். ஆரம்பத்திலிருந்தே அவரிடம் திறமை இருந்தது. தனது திறமைக்கு ஏற்றவாறு அவரால் செயல்பட முடியவில்லை என்பதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். 2026 டி20 உலகக் கோப்பையில் தனது சிறப்பான ஆட்டத்திற்குப் பிறகு, இந்த ஐபிஎல் சீசனில் சஞ்சு சாம்சன் விளையாடும் விதம், அவரை கேப்டன் பதவிக்கான ஒரு வலுவான போட்டியாளராக மாற்றியுள்ளது. ஐபிஎல்-லில் அவர் காட்டும் முதிர்ச்சியைக் கருத்தில் கொண்டு, சஞ்சு சாம்சன் எதிர்காலத்தில் கேப்டன் பதவிக்கான ஒரு வலுவான மற்றும் தெளிவான போட்டியாளராக உருவெடுத்துள்ளார் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

Follow Us