2027 ODI World Cup: இது நடந்தால் கிரிக்கெட்டில் ஓய்வு.. எதிர்காலம் குறித்து பேசிய கோலி சொன்ன ஷாக் விஷயம்!
Virat Kohli about Future: என்னால் பங்களிக்க முடியும் என்று அந்த அணியும் உணர்ந்தால், நான் நிச்சயமாக விளையாடுவேன். ஆனால், எனது தகுதியையும் முக்கியத்துவத்தையும் நான் நிரூபிக்க வேண்டும் என்று என்னை அணி நிர்வாகம் ஒரு கட்டத்தில் நினைக்க வைத்தால், நான் அந்த நிலையில் நீடிக்க மாட்டேன் என்றும் விராட் கோலி பேசியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான விராட் கோலி (Virat Kohli), சர்வதேச கிரிக்கெட்டில் தனது எதிர்காலம் மற்றும் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவது குறித்து வெளிப்படையாகப் பேசினார். இது குறித்தான வீடியோவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2027 ஒருநாள் உலகக் கோப்பை குறித்து கோலி பேசுகையில், “எனது அணுகுமுறை மிகவும் தெளிவானது. நான் அங்கம் வகிக்கும் அணிக்கோ அல்லது சூழலுக்கோ என்னால் பங்களிக்க முடிந்தால், மேலும் என்னால் பங்களிக்க முடியும் என்று அந்த அணியும் உணர்ந்தால், நான் நிச்சயமாக விளையாடுவேன். ஆனால், எனது தகுதியையும் முக்கியத்துவத்தையும் நான் நிரூபிக்க வேண்டும் என்று என்னை அணி நிர்வாகம் ஒரு கட்டத்தில் நினைக்க வைத்தால், நான் அந்த நிலையில் நீடிக்க மாட்டேன். ஏனென்றால், எனது கிரிக்கெட் திறன் குறித்து நான் முற்றிலும் நேர்மையாக இருக்கிறேன்,” என்று கூறினார்.
ALSO READ: OG இஸ் பேக்..? ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்.. முக்கிய பவுலரை களமிறக்கும் இந்தியா?




தொடர்ந்து பேசிய விராட் கோலி, “ஆட்டத்தை அணுகும் என் முறையைப் பற்றி நான் முற்றிலும் நேர்மையாக இருக்கிறேன். நான் முழு அர்ப்பணிப்புடன் கடினமாக உழைக்கிறேன். என் கிரிக்கெட் வாழ்க்கையில் கடவுள் எனக்கு அளித்த எல்லாவற்றிற்கும் நான் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மேலும், இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாகவும் நன்றியுள்ளவனாகவும் உணர்கிறேன். நான் விளையாடக் களத்தில் இறங்கும்போது, முழுமையான கவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் விளையாடுவேன். நான் மற்ற எந்த வீரரைப் போலவே, ஒருவேளை அவர்களை விட அதிகமாகவே கடினமாக உழைக்கிறேன். மேலும், நான் ஆட்டத்தை சரியான முறையில் விளையாடுகிறேன்.” என்றார்.
நான் அணிக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்:
அணியின் நலன் குறித்து பேசிய கோலி, “நான் எந்தவொரு விஷயத்தையும் குறை இல்லாமல் செய்வேன். ஏனென்றால், அப்படித்தான் நான் தயாராகிறேன். ஒரு 50 ஓவர் போட்டியில் வீசப்படும் ஒவ்வொரு பந்தும் என் வாழ்நாளின் கடைசிப் பந்து என்பது போல நான் தயாராகிறேன். அந்த மனநிலையுடன்தான் நான் பேட்டிங் செய்வேன். அதே ஆர்வத்துடன் விக்கெட்டுகளுக்கு இடையில் ஓடுவேன், அணிக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். இவ்வளவு கடினமாகவும், இவ்வளவு அர்ப்பணிப்புடனும் விளையாடிய பிறகும், எனது திறமையையும் முக்கியத்துவத்தையும் நான் நிரூபிக்க வேண்டிய ஒரு நிலையில் இருக்க நேர்ந்தால், அந்த இடம் எனக்கானது அல்ல” என்றார்.
விஜய் ஹசாரே கோப்பையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி அணிக்குத் திரும்பியது குறித்துப் பேசிய கோலி, ”2 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 208 ரன்கள் எடுத்தே. யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நம்பிக்கையுடனும், விளையாட்டின் மீதான தனது காதலுக்காக மட்டுமே விளையாடியேன். நான் விளையாடுவதை விரும்புகிறேன், அதனால் தான் விளையாட வேண்டும்’ என்று தோன்றியது. எனக்கு பேட்டிங் செய்வது மிகவும் பிடிக்கும், நான் அதில் மட்டுமே கவனம் செலுத்த விரும்பினேன். அதன் பிறகு நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. எனக்கு எந்த உணர்வும் ஏற்படவில்லை என்பதல்ல” என்றார்.
போட்டிக்கு இப்படிதான் தயாராகுவேன்..
The most anticipated, the one that we’ve all been waiting for… 𝗥𝗖𝗕 𝗣𝗼𝗱𝗰𝗮𝘀𝘁 𝗳𝘁. 𝗩𝗶𝗿𝗮𝘁 𝗞𝗼𝗵𝗹𝗶. 🎙️❤️
VK18 talks about his state of mind, playing with purpose, his Test career, leading India in the whites, the 2027 ODI World Cup and much more. 🔥
📽️ We’re… pic.twitter.com/qxCgTZR3Bs
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 15, 2026
ஒரு போட்டி அல்லது தொடருக்கு தயாராகுவது குறித்து பேசிய கோலி, “என்னால் என்ன வழங்க முடியும் என்பது எனக்குத் தெரியும், ஏனென்றால் நான் என் வாழ்க்கையை அப்படித்தான் வாழ்கிறேன். ஒரு தொடருக்காகத் தயாராவதற்கு, 2 அல்லது 3 வாரங்களுக்கு முன்பு திடீரென்று நான் கடுமையாக பயிற்சி செய்ய மாட்டேன். நான் வருடம் முழுவதும் பயிற்சி மேற்கொண்டுதான் இருகேன். எனவே, நீங்கள் என்னை திடீரென்று விளையாட அழைத்தாலும், ஒரு தொடர் வரவிருக்கிறது என்று சொன்னாலும், நான் எப்போதும் தயாராக இருக்கிறேன் என்று அர்த்தம்.
ஏனென்றால் அதுதான் என் அன்றாட வாழ்க்கை. உங்களுக்குத் தெரியும், நான் உடற்பயிற்சி செய்கிறேன், வீட்டில் நாங்கள் நல்ல உணவு சாப்பிடுகிறோம். ஏனென்றால், இப்படி வாழ்வது எனக்குப் பிடித்திருக்கிறது. இது வெறும் கிரிக்கெட் விளையாடுவது பற்றியது மட்டுமல்ல. எனவே, இதுதான் நான் இப்போது இருக்கும் நிலை. அதாவது, இந்த 27 (2027 உலகக் கோப்பை) பேச்சு மற்றும் அது போன்ற விஷயங்களைப் பொறுத்தவரை, உண்மையைச் சொல்லப்போனால், எனக்கு இப்போது 26 வயதின் மத்தியில் இருப்பது போலத்தான் இருக்கிறது. வெளிப்படையாக, நான் விளையாடுகிறேன் என்றால், நான் கிரிக்கெட் விளையாடவே விரும்புகிறேன். நான் தொடர விரும்புகிறேன். இந்தியாவுக்காக ஒரு உலகக் கோப்பையில் விளையாடுவது ஒரு சிறந்த அனுபவம். ஆனால் நான் சொன்னது போல், அது இரு தரப்பிலும் மதிக்கப்பட வேண்டும்” என்றார்.
இந்திய அணிக்கான ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியின் செயல்திறன்:
விராட் கோலி இந்திய அணிக்காக இதுவரை 311 போட்டிகளில் 299 இன்னிங்ஸ்களில் 54 சதங்கள் மற்றும் 77 அரை சதங்கள் 58.71 சராசரி மற்றும் 93.82 ஸ்டிரைக் ரேட்டுடன் 14,797 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 2025ம் ஆண்டு 13 இன்னிங்ஸ்களில், 65.10 சராசரி மற்றும் 96.10 ஸ்டிரைக் ரேட்டுடன் 651 ரன்கள் எடுத்தார். இதில் 3 சதங்களும் 4 அரை சதங்களும் அடங்கும்.
ALSO READ: வங்கதேசத்திடம் பாகிஸ்தான் படுதோல்வி.. இந்திய அணிக்கு சாதகமாக அமைந்த ஐசிசி டெஸ்ட் தரவரிசை!
விராட் கோலி 2026ம் ஆண்டு இதுவரை 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 3 இன்னிங்ஸ்களில் 80.00 சராசரி மற்றும் 105-க்கும் மேற்பட்ட ஸ்டிரைக் ரேட்டுடன் 240 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதமும் அடங்கும். ஐபிஎல் தொடருக்குப் பிறகு, வருகின்ற 2026 ஜூன் 14ம் தேதி முதல் விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் களமிறங்குவார். அன்று இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு எதிராகத் தனது சொந்த மண்ணில் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.