ICC Test Ranking: வங்கதேசத்திடம் பாகிஸ்தான் படுதோல்வி.. இந்திய அணிக்கு சாதகமாக அமைந்த ஐசிசி டெஸ்ட் தரவரிசை!
Team India ICC Test Ranking: ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் பும்ராவுக்குப் பிறகு முகமது சிராஜ் 12வது இடத்தில் உள்ளார். ரவீந்திர ஜடேஜா 14வது இடத்திலும், குல்தீப் யாதவ் 15வது இடத்திலும் உள்ளனர். இதற்கிடையில், ஆஸ்திரேலியாவின் அனுபவமிக்க வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 2வது இடத்தை எட்டியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் (BAN vs PAK) அணிகளுக்கிடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் 104 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது, இது சமீபத்திய ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் (ICC Test Ranking) சில மாற்றங்களை ஏற்பட வழிவகுத்துள்ளது. இதில், பாகிஸ்தான் வீரர்கள் தரவரிசையில் பின்னடைவைச் சந்தித்துள்ளதால், இந்திய வீரர்களின் தரவரிசையும் மேம்பட்டுள்ளது.
ALSO READ: டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு.. அசத்திய வங்கதேச அணி!




இந்திய வீரர்களுக்கு பயன்:
ஐசிசி வெளியிட்ட சமீபத்திய டெஸ்ட் தரவரிசையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். பும்ரா 879 புள்ளிகளுடன் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துள்ளார். அதேநேரத்தில் பேட்டிங் தரவரிசையில், இங்கிலாந்தின் ஜோ ரூட் 880 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இதற்கிடையில், இளம் இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 8வது இடத்திலும், சுப்மன் கில் 9வது இடத்திலும் உள்ளனர். ஜெய்ஸ்வால் 750 புள்ளிகளை பெற்றுள்ள நிலையில், கில் 730 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறியுள்ளார். அதேநேரத்தில், பாகிஸ்தானின் சவுத் ஷகீல் 6 இடங்கள் பின்தங்கியுள்ளார். இது இந்திய கேப்டன் சுப்மன் கில்லுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
மேலும், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 15-வது இடத்திலிருந்து 14-வது இடத்திற்கு முன்னேறினார். காயம் காரணமாக பாபர் அசாம் ஒரு இடம் பின்தங்கியதால், ரவீந்திர ஜடேஜாவும் 22-வது இடத்திற்கு முன்னேறினார். இதற்கிடையில், வங்கதேசத்தின் நட்சத்திர பேட்ஸ்மேன் நஸ்முல் ஹொசைன் ஷான்டோ 16 இடங்கள் முன்னேறி 23-வது இடத்தைப் பிடித்தார்.
ALSO READ: பும்ரா, சிராஜூக்கு ஓய்வு..? ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் யார் களம்..?
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசை:
Bangladesh’s impressive #WTC27 victory over Pakistan in the first Test in Mirpur has helped a host of their stars make ground on the latest ICC Men’s Test Player Rankings 😲
Details 👇https://t.co/fgjKCSUqHs
— ICC (@ICC) May 13, 2026
ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் பும்ராவுக்குப் பிறகு முகமது சிராஜ் 12வது இடத்தில் உள்ளார். ரவீந்திர ஜடேஜா 14வது இடத்திலும், குல்தீப் யாதவ் 15வது இடத்திலும் உள்ளனர். இதற்கிடையில், ஆஸ்திரேலியாவின் அனுபவமிக்க வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 2வது இடத்தை எட்டியுள்ளார். அதே நேரத்தில், ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸ் 4வது இடத்திற்கும், நியூசிலாந்தின் மாட் ஹென்றியும் 3வது இடத்தை எட்டியுள்ளனர். இப்படியான சூழ்நிலையில், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் நொமான் அலி 3 இடங்கள் பின்தங்கியுள்ளதால், மேற்கண்ட 3 பந்துவீச்சாளர்களும் தலா ஒரு இடம் முன்னேறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.