AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND W vs ZIM W: சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறை.. இந்திய மகளிர் – ஜிம்பாப்வே மகளிர் தொடர் அட்டவணை வெளியீடு!

IND W vs ZIM W Bilateral Series: இந்திய மகளிர் மற்றும் ஜிம்பாப்வே மகளிர் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி வருகின்ற 2026 அக்டோபர் 16ம் தேதியும், இரண்டாவது போட்டி 2026 அக்டோபர் 18ம் தேதியும், 3வது போட்டி 2026 அக்டோபர் 20ம் தேதியும் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையே ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.

IND W vs ZIM W: சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறை.. இந்திய மகளிர் – ஜிம்பாப்வே மகளிர் தொடர் அட்டவணை வெளியீடு!
இந்திய மகளிர் அணி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 07 May 2026 19:13 PM IST

ஐபிஎல் 2026 சீசன் நடைபெற்று வரும் நிலையில், ஜிம்பாப்வே மகளிர் அணியின் இந்திய சுற்றுப்பயணத்திற்கான அட்டவணையை பிசிசிஐ (BCCI) வெளியிட்டுள்ளது. இது ஜிம்பாப்வே மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு (Indian Womens Team) இடையேயான முதல் இருதரப்பு தொடராகும். இரு அணிகளுக்கும் இடையே 3 டி20 போட்டிகளும் 3 ஒருநாள் போட்டிகளும் நடைபெறும். இந்த டி20 தொடரானது வருகின்ற 2026 அக்டோபர் 16ம் தேதியும், ஒருநாள் தொடர் வருகின்ற 2026 அக்டோபர் 23ம் தேதியும் தொடங்கும். அனைத்து டி20 போட்டிகளும் ராய்ப்பூரிலும், ஒருநாள் போட்டிகள் பரோடாவிலும் நடைபெறும்.

ALSO READ: வெளியான வருடாந்திர டி20 தரவரிசை.. முதலிடத்தில் சாம்பியன்.. ராஜநடை போடும் இந்தியா!

டி20 மற்றும் ஒருநாள் போட்டி எப்போது தொடங்குகிறது..?


இந்திய மகளிர் மற்றும் ஜிம்பாப்வே மகளிர் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி வருகின்ற 2026 அக்டோபர் 16ம் தேதியும், இரண்டாவது போட்டி 2026 அக்டோபர் 18ம் தேதியும், 3வது போட்டி 2026 அக்டோபர் 20ம் தேதியும் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையே ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 2026 அக்டோபர் 23ம் தேதியும், இரண்டாவது போட்டி 2026 அக்டோபர் 25ம் தேதியும், மூன்றாவது போட்டி 2026 அக்டோபர் 28ம் தேதியும் நடைபெறுகிறது.

டி20 தொடர் அட்டவணை

  • முதல் டி20: 2026 அக்டோபர் 16, ராய்ப்பூர்
  • 2வது டி20: 2026 அக்டோபர் 18, ராய்ப்பூர்
  • 3வது டி20: 2026 அக்டோபர் 20, ராய்ப்பூர்

ஒருநாள் தொடர் அட்டவணை

  • முதல் ஒருநாள் போட்டி: 2026 அக்டோபர் 23, பரோடா
  • 2வது ஒருநாள் போட்டி: 2026 அக்டோபர் 25, பரோடா
  • 3வது ஒருநாள் போட்டி: 2026 அக்டோபர் 28, பரோடா

ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளின் செயல்பாடு

இந்திய மகளிர் அணி இதுவரை 345 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 188 போட்டிகளில் வெற்றியும், 150 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. அதேநேரத்தில், 2 போட்டிகள் சமனிலும், 5 போட்டிகள் முடிவில்லாமல் போயின. ஜிம்பாப்வே மகளிர் அணியானது 2021 முதல் 35 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது. இதில், 10 போட்டிகளில் வெற்றி பெற்று 14 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. மேலும், ஒரு போட்டி சமனில் முடிந்தது.

ALSO READ: ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமை.. மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

டி20 போட்டிகளில் செயல்திறன்:

ஜிம்பாப்வே மகளிர் அணி இதுவரை விளையாடிய 89 டி20 சர்வதேசப் போட்டிகளில் 55-ல் வெற்றியையும் 33 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்தது. மறுபுறம், இந்திய மகளிர் அணி 2006 முதல் 217 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 119 போட்டிகளில் வெற்றியையும், 91 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்த நிலையில், 6 போட்டிகள் முடிவில்லாமல் போயின.

Follow Us