Women’s T20 World Cup 2026: ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமை.. மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
India Women's T20 World Cup Squad 2026: 2026 ஜூன் 12ம் தேதி தொடங்கவிருக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய மகளிர் அணியை பிசிசிஐ சனிக்கிழமை அறிவித்தது. இதற்கு முன்னதாக, பிசிசிஐ தலைமையகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. ஹர்மன்பிரீத் கவுர் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், ஸ்மிருதி மந்தனாவுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2026 சீசனுக்கு (IPL 2026) மத்தியில் 2026 ஜூன் 12ம் தேதி தொடங்கவிருக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய மகளிர் அணியை பிசிசிஐ (BCCI) இன்று அதாவது 2026 மே 2ம் தேதி அறிவித்தது. இதற்கு முன்னதாக, பிசிசிஐ தலைமையகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. ஹர்மன்பிரீத் கவுர் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், ஸ்மிருதி மந்தனாவுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய மகளிர் அணி தனது பயணத்தை வருகின்ற 2026 ஜூன் 14 ம் தேதி தொடங்கும். பர்மிங்காமில் நடைபெறும் போட்டியில் இந்திய அணி, தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை எதிர்கொள்ளும்.
மொத்தம் 33 போட்டிகள்:
📸
The Selection Committee Meeting for #TeamIndia‘s squad announcement for the upcoming ICC Women’s T20 World Cup is underway at the BCCI headquarters. 🙌#WomenInBlue | #T20WorldCup pic.twitter.com/3xg8k8oMzJ
— BCCI Women (@BCCIWomen) May 2, 2026
இத்தொடரின் 10வது பதிப்பில், சாம்பியன் பட்டத்திற்காக 12 அணிகள் போட்டியிடுகின்றன. இந்த அணிகள் தலா 6 அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ குழுவில் இந்தியாவும் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளன. அனைத்து அணிகளுக்கும் இடையே மொத்தம் 33 போட்டிகள் நடைபெறும். இத்தொடரின் இறுதிப் போட்டி வருகின்ற 2026 ஜூலை 5ஆம் தேதி நடைபெறும். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகள் இப்போட்டியை நடத்துகின்றன. 2026 மகளிர் டி20 உலகக் கோப்பையின் ‘ஏ’ குழுவில் இந்திய அணியுடன், தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம், நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.




ஹர்மன் ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற 2025 ஒருநாள் உலகக் கோப்பையில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, அந்த அணியில் இருந்து 11 வீராங்கனைகளும் டி20 உலகக் கோப்பைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி முதல் முதலாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: விளையாடாமல் கிடைத்த பரிசு.. டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் கண்ட இந்திய அணி!
2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், பார்தி ஃபுல்மாலி, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஸ்ரீ சரணி, யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), நந்தனி ஷர்மா, கே.அருந்ததி ரெட்டி, எஸ். பாட்டீல், ராதா யாதவ்.