IPL 2026: 8 போட்டிகளில் 2 வெற்றிகள் மட்டுமே.. பிளே ஆஃப் செல்ல மும்பைக்கு வாய்ப்பு உள்ளதா?
Mumbai Indians Playoff Qualification: மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி, 2 வெற்றிகளுக்குப் பிறகு 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது. உண்மை என்னவென்றால், மும்பை இந்தியன்ஸ் அணியால் இன்னும் எளிதாக பிளேஆஃப்களுக்குத் தகுதி பெற முடியும். ஆனால் பிரச்சனை என்னவென்றால், மும்பை மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) மும்பை இந்தியன்ஸின் பயணம் மிகவும் கடினமாக இருந்து வருகிறது. கேப்டன் ஹர்திக் பாண்டியா தொடர்ச்சியான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். ஏனெனில், அவரது தலைமையின் கீழ் இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக, ஐபிஎல் 2026 புள்ளி அட்டவணையில் மும்பை இந்தியன்ஸ் அணி (Mumbai Indians) 9வது இடத்தில் உள்ளது. ஐபிஎல் 2026 தொடங்கியதிலிருந்தே மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்து வருகிறது. லீக் சுற்றில் மும்பையின் பாதிக்கும் மேற்பட்ட போட்டிகள் முடிவடைந்த நிலையில், ஐபிஎல் 2026 சீசனில் மும்பை அணி இனி சம்பிரதாயத்திற்கு விளையாடுமா அல்லது பிளேஆஃப் சுற்றுக்குச் செல்ல அவர்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளதா என்பதே இப்போதுள்ள மிகப்பெரிய கேள்வியாகும். மும்பை இந்தியன்ஸின் பிளேஆஃப் வாய்ப்புகளுக்கான முழுமையான சமன்பாடு இதோ.
ALSO READ: எல்.எஸ்.ஜியிலும் கிடைக்காத வாய்ப்பு.. மாநில கிரிக்கெட்டுக்கு செல்லும் அர்ஜூன் டெண்டுல்கர்!
பிளேஆஃப்களுக்கு இன்னும் ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா?
மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி, 2 வெற்றிகளுக்குப் பிறகு 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது. உண்மை என்னவென்றால், மும்பை இந்தியன்ஸ் அணியால் இன்னும் எளிதாக பிளேஆஃப்களுக்குத் தகுதி பெற முடியும். ஆனால் பிரச்சனை என்னவென்றால், மும்பை மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். லீக் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இன்னும் 6 போட்டிகள் மீதமுள்ளன, மேலும் இந்தப் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெறுவதன் மூலம் மும்பை அணியால் 16 புள்ளிகளை எட்ட முடியும்.




பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதை உறுதிசெய்யும் ஒரு அளவுகோல் 16 புள்ளிகள் ஆகும். அதன்படி, வரவிருக்கும் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று 16 புள்ளிகளை எட்ட வேண்டுமானால், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி கடுமையாக போராட வேண்டியிருக்கும்.
ஒரு தோல்வி கூட மும்பைக்கு ஆப்பா..?
மும்பை இந்தியன்ஸின் தற்போதைய ஆட்டத்திறனைக் கருத்தில் கொண்டால், 6 போட்டிகளிலும் வெற்றி பெறுவது ஒரு கடினமான காரியமாக இருக்கும். ஒருவேளை மும்பை தங்களின் அடுத்த 6 போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்றால், மொத்தமாக 14 புள்ளிகளை பெறும். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்கூட மும்பையால் இறுதி நான்கு இடங்களுக்குள் நுழைய முடியுமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுகிறது.
அதாவது, மும்பை தனது அடுத்த 6 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும். ஆனால், அது மற்ற போட்டிகளின் முடிவுகளைப் பொறுத்தே அமையும். முதலில், மும்பை தனது நிகர ரன் ரேட்டை மேம்படுத்த வேண்டும்,.அது தற்போது -0.784 ஆக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், வேறு எந்த அணியாவது 14 புள்ளிகளை எட்டினால், அதன் நிகர ரன் ரேட் மும்பையை விடக் குறைவாக இருக்க வேண்டும்.