IPL 2026: காத்திருக்கும் ரசிகர்கள்.. மும்பைக்கு எதிராக களமிறங்குகிறாரா தோனி..?
MS Dhoni Injury Update: நடப்பு ஐபிஎல் 2026 சீசனின் தொடக்க நாளான மார்ச் 28ம் தேதி சீசனின் முதல் இரண்டு வாரங்களுக்கு தோனி விளையாட மாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு அறிவிப்பை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஒரு மாதத்திற்கும் மேலாகியும் தோனி இன்னும் அணிக்குத் திரும்பவில்லை. எனவே, மும்பை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் தோனி களமிறங்குவாரா என்பதை தெரிந்து கொள்வோம்.
ஐபிஎல் 2026 சீசனின் (IPL 2026) கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்டது. ஆனால், ஆரம்பம் முதல் இப்போது வரை உள்ள மிகப்பெரிய கேள்வி, சென்னை சூப்பர் கிங்ஸின் (Chennai Super Kings) முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி இந்த சீசனின் முதல் போட்டியில் எப்போது விளையாடுவார் என்பதுதான். இன்று அதாவது 2026 மே 2ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான சீசனின் 44வது போட்டி இரவு 7:30 மணிக்குத் தொடங்குகிறது. போட்டிக்கு முன்னதாக, ‘2026 சீசனின் முதல் போட்டியில் தோனி இன்று விளையாடுவாரா இல்லையா?’ என்ற கேள்விக்கான பதிலை அறிய ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
நடப்பு ஐபிஎல் 2026 சீசனின் தொடக்க நாளான மார்ச் 28ம் தேதி சீசனின் முதல் இரண்டு வாரங்களுக்கு தோனி விளையாட மாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு அறிவிப்பை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஒரு மாதத்திற்கும் மேலாகியும் தோனி இன்னும் அணிக்குத் திரும்பவில்லை. எனவே, மும்பை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் தோனி களமிறங்குவாரா என்பதை தெரிந்து கொள்வோம்.




ALSO READ: சூர்யவன்ஷியை பார்த்து அவ்வளவு பயம்.. ஆக்ரோஷ கொண்டாட்டத்திற்கு கைல் ஜேமிசன் விளக்கம்!
மைக்கேல் ஹஸ்ஸி கொடுத்த தகவல்:
Three eras in one frame! 🌟🌟🌟#WhistlePodu #CSKvMI pic.twitter.com/XrbND6Xhth
— Chennai Super Kings (@ChennaiIPL) May 1, 2026
தோனியின் உடற்தகுதி குறித்த சமீபத்திய தகவலை சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். மும்பைக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹஸ்ஸி, ”தோனி பேட்டிங் செய்யவும் விக்கெட் கீப்பிங் செய்யவும் தயாராக இருக்கிறார். ஆனால், அவரது ஓட்டம் தொடர்பான பிரச்சினைகள் இன்னும் தொடர்கின்றன. தோனி வேகமாக குணமடைந்து வருகிறார், விரைவில் அணிக்குத் திரும்புவார். தோனி படிப்படியாக முழு உடற்தகுதியை நோக்கி நகர்ந்து வருகிறார். தோனி முழு உடற்தகுதியுடன் உணரும்போது மட்டுமே திரும்புவார்” என்றார்.
சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கருத்தின்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் மகேந்திர சிங் தோனி விளையாட மாட்டார் என்றே தெரிகிறது. இருப்பினும், சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியின் ஈடுபடும்போதெல்லாம், எம்.எஸ்.தோனியும் தவறாமல் பங்கேற்கிறார். இதுமட்டுமின்றி, சிஎஸ்கே மட்டுமின்றி மற்ற அணியின் இளம் வீரர்களும் ஆலோசனை வழங்கி வருகிறார்.
ALSO READ: சிஎஸ்கே-க்கு இன்னும் பிளே ஆஃப் செல்ல வாய்ப்புள்ளதா..? சமன்பாடு என்ன?
ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸின் செயல்பாடு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி, 3ல் வெற்றி பெற்று, மீதமுள்ள 5ல் தோல்வியடைந்துள்ளது. இதன் காரணமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி அட்டவணையில் ஏழாவது இடத்தில் உள்ளது.