AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: சிஎஸ்கே-வின் சொந்த ஸ்டேடியத்தில் மோதும் எம்ஐ.. வாட்டி எடுக்குமா வெயில்..?

CSK vs MI Weather Report: சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2026 சீசனில் 8 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் ஆறு புள்ளிகளைப் பெற்று, புள்ளி அட்டவணையில் 7வது இடத்தில் உள்ளது. பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற, சிஎஸ்கே அணி மீதமுள்ள 6 போட்டிகளில் குறைந்தது ஐந்திலாவது வெற்றி பெற வேண்டும்.

IPL 2026: சிஎஸ்கே-வின் சொந்த ஸ்டேடியத்தில் மோதும் எம்ஐ.. வாட்டி எடுக்குமா வெயில்..?
சென்னை - மும்பைImage Source: Jio Hotstar
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 02 May 2026 14:38 PM IST

ஐபிஎல் 2026 சீசனின் 44வது போட்டியில் இன்று அதாவது 2026 மே 2ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகளுக்கிடையே இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. சென்னையில் சொந்த மண்ணில் எம்ஐ அணி, சிஎஸ்கே அணியை வீழ்த்துமா அல்லது சிஎஸ்கே அணி, எம்ஐ அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி 2 புள்ளிகளைப் பெறுமா என்பதைப் பார்க்க, கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சிஎஸ்கே மற்றும் எம்ஐ ஆகிய 2 அணிகளுமே தலா 5 ஐபிஎல் பட்டங்களுடன், லீக் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளாக உள்ளது. நடப்பு சீசனில் இரு அணிகளுமே ஏமாற்றமளிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: எல்.எஸ்.ஜியிலும் கிடைக்காத வாய்ப்பு.. மாநில கிரிக்கெட்டுக்கு செல்லும் அர்ஜூன் டெண்டுல்கர்!

புள்ளி அட்டவணையில் சிஎஸ்கேவின் நிலை

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2026 சீசனில் 8 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் ஆறு புள்ளிகளைப் பெற்று, புள்ளி அட்டவணையில் 7வது இடத்தில் உள்ளது. பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற, சிஎஸ்கே அணி மீதமுள்ள 6 போட்டிகளில் குறைந்தது ஐந்திலாவது வெற்றி பெற வேண்டும். எனவே, சிஎஸ்கே தனது சொந்த மண்ணில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வெற்றியைப் பெற உறுதியாக இருக்கும்.

ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்பாடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விடவும் மோசமாக உள்ளது. இந்த சீசனில் நடந்த 8 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ், புள்ளி அட்டவணையில் 9வது இடத்தில் பின்தங்கியுள்ளது. இருப்பினும், மும்பை இந்தியன்ஸ் பலமுறை இதுபோன்ற சூழ்நிலைகளைக் கடந்து பிளேஆஃப்களுக்கு முன்னேறியுள்ளது. இந்த முறை, அந்த அணி பிளேஆஃப்களுக்கு முன்னேற விரும்பினால், இன்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தொடங்கி, மீதமுள்ள 6 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.

சிஎஸ்கேவை பழிதீர்க்குமா எம்ஐ..?

மும்பை இந்தியன்ஸ் அணி, தங்களது சொந்த ஸ்டேடியமான வான்கடே ஸ்டேடியத்தில் கடந்த 2026 ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. அந்தத் தோல்விக்குப் பழிவாங்க மும்பை இந்தியன்ஸ் அணி முனைப்புடன் இருக்கும். மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்.எஸ். தோனி விளையாடுவாரா அல்லது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா விளையாடுவாரா என்பது குறித்தும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

பிட்ச் எப்படி..?

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சிஎஸ்கே மற்றும் எம்ஐ இடையிலான போட்டி 5-ஆம் எண் பிட்ச்சில் நடைபெறும். இதே பிட்ச்சில்தான் பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களது 210 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. கடந்த 5 போட்டிகளில் சராசரியாக 192 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளதால், இந்த பிட்ச் பேட்டிங்கிற்குச் சாதகமாக மாறியுள்ளது.

ALSO READ: சென்னையில் எம்ஐயை எதிர்கொள்ளும் சிஎஸ்கே.. சேப்பாக்கம் பிட்ச் எப்படி..?

வானிலை எப்படி..?

சிஎஸ்கே மற்றும் எம்ஐ இடையிலான போட்டியின் போது சென்னையில் வெப்பநிலை சுமார் 35 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 மே 2ம் தேதியான இன்று வானம் தெளிவாகவும், 2 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 40 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 21 போட்டிகளிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

Follow Us