AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: RR vs DC போட்டியில் தாக்குதல் தொடுக்குமா மழை..? வானிலை நிலவரம் இதோ!

RR vs DC Weather Update: ஜெய்ப்பூரில் இன்றைய போட்டிக்கு வானிலை சாதகமாக உள்ளது. மழை பெய்ய வாய்ப்பில்லை என்றாலும், அவ்வப்போது மேகமூட்டம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் பேட்டிங் செய்யும் அணி, எந்த அணியாக இருந்தாலும் வானிலையால் சவால்களை எதிர்கொள்ள இருக்கிறது.

IPL 2026: RR vs DC போட்டியில் தாக்குதல் தொடுக்குமா மழை..? வானிலை நிலவரம் இதோ!
ராஜஸ்தான் - டெல்லி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 May 2026 15:39 PM IST

ஐபிஎல் 2026- ன் (IPL 2026) 43-வது போட்டி இன்று அதாவது 2026 மே 1ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajastan Royals) மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற உள்ளது . இந்தப் போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் அதிக ரன்கள் குவிக்கப்படும் போட்டியாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வானிலை எப்படி இருக்கும்..? ஜெய்ப்பூர் மைதானத்தின் ஐபிஎல் சாதனைப் பதிவு என்னவாக இருக்கும் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்.. உத்தேச ஆடும் லெவன், பிட்ச் ரிப்போர்ட்!

இரு அணிகளின் நிலை என்ன..?

ஐபிஎல் 2026-ஐப் பொறுத்தவரை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளி அட்டவணையில் 4வது இடத்தில் உள்ளது. ஆர்ஆர் அணி 9 போட்டிகளில் ஆறில் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் தனது கடைசி 5 போட்டிகளில் 3ல் தோல்வியடைந்துள்ளது. ஆனால் தனது கடைசிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்திய பிறகு, ராஜஸ்தான் அணி புது நம்பிக்கையை பெற்றுள்ளது.டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது கடைசி 5 போட்டிகளில் 4ல் தோல்வியடைந்துள்ளது. டெல்லி அணி 6 புள்ளிகளுடன் புள்ளி அட்டவணையில் 7வது இடத்தில் உள்ளது.

RR மற்றும் DC அணிகளுக்கு இடையேயான நேருக்கு நேர் சாதனை:

  • மொத்த போட்டிகள்: 30
  • ராஜஸ்தான் வெற்றி: 15
  • டெல்லி வெற்றி: 15

சவாய் மான்சிங் ஸ்டேடியம் பிட்ச் ரிப்போர்ட்:

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி, சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் பிட்ச் 4ல் போட்டி நடைபெறவுள்ளது. இங்கு நடைபெற்ற கடந்த 3 இரவுப் போட்டிகளிலும் அதிக ரன்கள் குவிக்கப்பட்டுள்ளன. அவற்றில், இரண்டு முறையும் முதலில் பேட் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், வானிலை மற்றும் ஆடுகளத்தின் நிலையைப் பொறுத்து, டாஸ் வென்ற கேப்டன் முதலில் பந்துவீச முடிவு செய்யலாம்.

வானிலை எப்படி இருக்கும்?

ஜெய்ப்பூரில் இன்றைய போட்டிக்கு வானிலை சாதகமாக உள்ளது. மழை பெய்ய வாய்ப்பில்லை என்றாலும், அவ்வப்போது மேகமூட்டம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் பேட்டிங் செய்யும் அணியும் வானிலையால் சவால்களை எதிர்கொள்ளும் . மாலை 6 மணி முதல் 7 மணி வரை வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும், மணிக்கு 16 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: நேற்றைய போட்டி முடிவு.. குஜராத்திற்கு லாபமோ ஆர்சிபிக்கு நஷ்டமோ இல்லை.. புள்ளி பட்டியலில் நிகழ்ந்த மாற்றம் இதுதான்!

சவாய் மான்சிங் மைதானத்தில் ஐபிஎல் சாதனைகள்

  • மொத்த போட்டிகள்: 65
  • முதலில் பேட்டிங் செய்த அணிகளின் வெற்றிகள்: 23
  • முதலில் பந்துவீசிய அணிகள் வென்றவை: 42
  • தனிநபர் அதிகபட்ச ஸ்கோர்: 113 (விராட் கோலி)
  • சிறந்த பந்துவீச்சு: 6/14 (சோஹைல் தன்வீர்)
  • அதிகபட்ச மொத்த ரன்கள்: 229/5 (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)
  • அதிகபட்ச ரன் சேஸ்: 119/7 (குஜராத் டைட்டன்ஸ்)

Follow Us