AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ஐபிஎல்லில் முக்கிய விதி.. இந்த வீரரால் இன்று விளையாடாமல் போகலாம்..!

Lungi Ngidi Injury Update: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி என்கிடி, தனது தலையில் ஏற்பட்ட காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து, வலைப்பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளார். இருப்பினும், ஐசிசியின் மூளையதிர்ச்சி விதிமுறைகள் காரணமாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அவரால் விளையாட முடியாது.

IPL 2026: ஐபிஎல்லில் முக்கிய விதி.. இந்த வீரரால் இன்று விளையாடாமல் போகலாம்..!
லுங்கி என்கிடிImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 May 2026 14:32 PM IST

ஐபிஎல் 2026-ன் 43-வது போட்டியில் இன்று அதாவது 2026 மே 1ம் தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் (Rajastan Royals) சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு மோதுகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு (Royal Challengers Bengaluru)  எதிரான முந்தைய போட்டியில் டெல்லி அணி வெறும் 75 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இத்தகைய சூழ்நிலையில், அக்சர் படேல் தலைமையிலான டெல்லி அணி மீண்டு வர இந்த போட்டியில் கடுமையாக முயற்சிக்கும். ஆனால் இந்தப் போட்டி டெல்லிக்கு எளிதாக இருக்காது. டெல்லி அணி தனது நட்சத்திர வீரர்களில் ஒருவரை இழக்க நேரிடும். அந்த வீரர் முழு உடற்தகுதியுடன் இருந்தாலும், ஐபிஎல் விதி காரணமாக அவரால் விளையாட முடியாது. இந்தநிலையில், யார் அந்த வீரர், விளையாட முடியாமல் போனதற்கு காரணம் என்ன உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: படிதார் அடித்த பந்து.. தரையில் பட்டு கேட்ச்? விவாதத்தை கிளப்பும் வீடியோ!

யார் அந்த வீரர்..?

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி என்கிடி, தனது தலையில் ஏற்பட்ட காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து, வலைப்பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளார். இருப்பினும், ஐசிசியின் மூளையதிர்ச்சி விதிமுறைகள் காரணமாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அவரால் விளையாட முடியாது. கடந்த 2026 ஏப்ரல் 25ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது என்கிடிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கேட்ச் பிடிக்க முயன்றபோது தலையில் விழுந்த அவர், பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சில மணிநேரங்களிலேயே என்கிடி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

காயம் காரணமாக லுங்கி என்கிடிக்கு ஏற்பட்ட மூளையதிர்ச்சி மாற்று வீரராக, டெல்லி கேப்பிடல்ஸ் அணி விப்ராஜ் நிகமை ஆடும் லெவனில் சேர்த்தது. கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்ட புதிய ஐசிசி விதிகளின்படி, மூளையதிர்ச்சி காரணமாக ஒரு போட்டியில் பங்கேற்காத வீரர், குறைந்தது ஏழு நாட்களுக்கு கிரிக்கெட் தொடர்பான விஷயங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். இந்த விதி ஐபிஎல் தொடரிலும் பின்பற்றப்படுகிறது. கடந்த 2026 ஏப்ரல் 25ம் தேதி காயம் ஏற்பட்டதால், இன்று அதாவது 2026 மே 1ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் என்கிடியால் விளையாட முடியாது.

ALSO READ: ராஜஸ்தான் ராயல்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்.. உத்தேச ஆடும் லெவன், பிட்ச் ரிப்போர்ட்!

லுங்கி என்கிடி இடத்தில் யார் களமிறங்குவார்கள்..?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக டெல்லி அணி பெரும் தோல்வியைச் சந்தித்த கடந்த போட்டியிலும் லுங்கி என்கிடி இடம்பெறவில்லை. இருப்பினும், இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் அவரது இடத்தை நிரப்பக்கூடும். காயம் காரணமாக ஸ்டார்க் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இருப்பினும், மிட்செல் ஸ்டார்க் தற்போது முழு உடற்தகுதியுடன் உள்ளார். மேலும் இன்றைய ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆடும் லெவனில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us