IPL 2026: இ-சிகரெட் பயன்பாடு.. ரியான் பராக் மீது ஆக்ஷன் எடுத்த பிசிசிஐ!
Riyan Parag: கடந்த 2026 ஏப்ரல் 28ம் தேதி முல்லன்பூரில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ராஜஸ்தான் அணியின் இன்னிங்ஸின் 16வது ஓவரின் போது, கேமரா ராஜஸ்தான் ராயல்ஸ் உடை மாற்றும் அறையை நோக்கித் திரும்பியபோது, ரியான் வேப் புகைத்துக் கொண்டிருந்தார்.
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) 40வது போட்டியின் போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான ரியான் பராக், டிரெஸ்ஸிங் ரூமில் வேப்பிங் (இ-சிகரெட்) புகைத்து கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த விவகாரம் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்தியாவில் இ-சிகரெட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் ரியான் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடலாம் என்று சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வந்தது. இதையடுத்து தற்போது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் மீது நடவடிக்கை எடுத்து, அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
ALSO READ: இதுவரை 2 விக்கெட் மட்டுமே.. ஐபிஎல் 2026 சீசனில் பும்ராவுக்கு ஃபேட் டைம்..!




இந்த வழக்கில் ரியான் பராக்கின் போட்டி ஊதியத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீரர்கள் மற்றும் அணி அதிகாரிகளுக்கான ஐபிஎல் நடத்தை விதிகளின் நிலை 1-ஐ மீறியதற்காக அவருக்கு ஒரு குறைப்புப் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த வழக்கில் ரியானுக்கு சிறைத் தண்டனையோ அல்லது போட்டித் தடையோ விதிக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.
இது தொடர்பாக ஐபிஎல் செய்திகுறிப்பில்.”’விளையாட்டிற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நடத்தை’ தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிகளின் 2.21வது பிரிவை ரியான் மீறியது கண்டறியப்பட்டுள்ளது. இரண்டாவது இன்னிங்ஸின் போது, டிரெஸ்ஸிங் ரூமில் ரியான் வேப் பயன்படுத்தியது காணப்பட்டபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ரியான் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, போட்டி நடுவர் அமித் ஷர்மா விதித்த தண்டனையை ஏற்றுக்கொண்டார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ALSO READ: டிரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்து புகை.. ரியான் பராக்கிற்கு சிறைத்தண்டனை?
கடுமையான தண்டனை வழங்க பிசிசிஐ பரிசீலனை:
What’s happening in the ipl ?#PBKS#RR@IPL @BCCI
Riyan parag is using vape 😱😱😱😓 pic.twitter.com/xVXhb0LKZW— Vansh Goyal (@vanshgoyal0674) April 28, 2026
கடந்த 2026 ஏப்ரல் 28ம் தேதி முல்லன்பூரில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ராஜஸ்தான் அணியின் இன்னிங்ஸின் 16வது ஓவரின் போது, கேமரா ராஜஸ்தான் ராயல்ஸ் உடை மாற்றும் அறையை நோக்கித் திரும்பியபோது, ரியான் வேப் புகைத்துக் கொண்டிருந்தார். இனி வரும் காலங்களில் ஐபிஎல்-இன் நற்பெயரைக் காப்பதற்காக, விதிமீறிய அணி, அதன் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பான பிற வழிகளையும் பிசிசிஐ பரிசீலித்து வருகிறது. முல்லன்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது, ரியான் பராக் டிரெஸ்ஸிங் ரூமில் வேப்பிங் செய்துகொண்டிருந்தது காணப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் விரைவாகப் பரவி, பெரும் விவாதத்தைத் தூண்டியது. தற்போது பிசிசிஐ இந்த விவகாரத்திற்குத் தீர்வு கண்டுள்ளது.