AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Team India: வெளியான வருடாந்திர டி20 தரவரிசை.. முதலிடத்தில் சாம்பியன்.. ராஜநடை போடும் இந்தியா!

ICC T20I Rankings: 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, 275 மதிப்பீட்டுடன் வருடாந்திர டி20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து 262 மதிப்பீட்டுடன் 2ம் இடத்திலும், ஆஸ்திரேலியா 258 மதிப்பீட்டுடன் மூன்றாம் இடத்திலும், நியூசிலாந்து 247 மதிப்பீட்டுடன் 4ம் இடத்திலும், தென்னாப்பிரிக்கா 244 மதிப்பீட்டுடன் 5ம் இடத்திலும் உள்ளன.

Team India: வெளியான வருடாந்திர டி20 தரவரிசை.. முதலிடத்தில் சாம்பியன்.. ராஜநடை போடும் இந்தியா!
இந்திய அணி
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 06 May 2026 09:26 AM IST

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தனது ஆண்டுத் தரவரிசையை நேற்று அதாவது 2026 மே 5ம் தேதிவெளியிட்டது. இதில், ஆண்கள் டி20ஐ தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தில் நீடிக்கிறது. இந்திய அணி (Indian Cricket Team) தங்களது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. அதேநேரத்தில், மகளிர் டி20ஐ தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் நீடிக்கிறது. இந்த தரவரிசையில் பாகிஸ்தானின் செயல்பாடு சாதகமற்றதாக இருந்தது. கடந்த 2026 மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 2வது முறையாகவும், டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) வரலாற்றில் 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: விளையாடாமல் கிடைத்த பரிசு.. டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் கண்ட இந்திய அணி!

கடந்த 2025 மே மாதத்திற்கு பிறகு விளையாடப்படும் அனைத்துப் போட்டிகளுக்கும் 100 சதவீத மதிப்பீட்டையும், கடந்த 2 ஆண்டுகளில் விளையாடப்படும் போட்டிகளுக்கு 50 சதவீத மதிப்பீட்டையும் வழங்கும். சமீபத்திய தரவரிசைகளின்படி, ஆண்கள் பிரிவு தரவரிசையில் இங்கிலாந்தை விட இந்தியாவின் முன்னிலை 14 புள்ளிகளிலிருந்து 13 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. அதே சமயம், மகளிர் பிரிவு தரவரிசையில் இங்கிலாந்தை விட ஆஸ்திரேலியாவின் முன்னிலை 18 புள்ளிகளிலிருந்து 12 புள்ளிகளாகச் சுருங்கியுள்ளது.

இந்திய அணி தரவரிசை:


2026ம் ஆண்டின் தொடக்கத்தில் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி, 275 மதிப்பீட்டுடன் வருடாந்திர டி20 தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து 262 மதிப்பீட்டுடன் 2ம் இடத்திலும், ஆஸ்திரேலியா 258 மதிப்பீட்டுடன் மூன்றாம் இடத்திலும், நியூசிலாந்து 247 மதிப்பீட்டுடன் 4ம் இடத்திலும், தென்னாப்பிரிக்கா 244 மதிப்பீட்டுடன் 5ம் இடத்திலும் உள்ளன. இந்தத் தரவரிசையில் பாகிஸ்தான் முதல் ஐந்து இடங்களுக்கு வெளியே, 6வது இடத்தில் உள்ளது. அதன் மதிப்பீடு 240 ஆகும். பாகிஸ்தான் அணியை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அணிகள் உள்ளன.

ALSO READ: ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமை.. மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

இத்தாலி பெற்ற பலன்:

இத்தாலி 2026-ல் முதல் முறையாக டி20 உலகக் கோப்பையில் பங்கேற்றது. இத்தொடரில் நேபாளத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அந்த அணி ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த செயல்பாடு, தரவரிசையில் இத்தாலி அணி 3 இடங்கள் முன்னேற உதவியுள்ளது. அதன்படி, சர்வதேச டி20 தரவரிசையில் இத்தாலி தற்போது 23-வது இடத்தில் உள்ளது.

இதுமட்டுமின்றி, இந்த முறை தரவரிசையில் உள்ள அணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. முன்பு 102 அணிகள் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 98 ஆகக் குறைந்துள்ளது. ஃபிஜி, காம்பியா, கிரீஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய அணிகள் தரவரிசையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இந்த 3 அணிகளும் கடந்த 3 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 8 டி20 போட்டிகளிலாவது விளையாடியிருக்க வேண்டும்.

Follow Us