AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Team India: பும்ரா, சிராஜூக்கு ஓய்வு..? ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் யார் களம்..?

IND vs AFG Test: ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் உடற்தகுதி மற்றும் சோர்வுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி பிளேஆஃப் சுற்றிலிருந்து வெளியேறியதால் பும்ராவுக்கு ஓரளவு ஓய்வு கிடைக்கலாம். ஆனால் பிசிசிஐ அவரது பணிச்சுமை குறித்து எப்போதும் எச்சரிக்கையாகவே இருக்கும்.

Team India: பும்ரா, சிராஜூக்கு ஓய்வு..? ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் யார் களம்..?
ஜஸ்பிரித் பும்ரா - முகமது சிராஜ்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 May 2026 18:32 PM IST

வருகின்ற 2026 ஜூன் மாதம் தொடங்கவிருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெறும் ஒரேயொரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை (Indian Cricket Team) தேர்ந்தெடுப்பது, தேர்வாளர்களுக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஐபிஎல் 2026 இறுதிப் போட்டிக்கும் டெஸ்ட் போட்டிக்கும் இடையில் வெறும் 6 நாட்களே உள்ள நிலையில், பணிச்சுமை மேலாண்மை காரணமாக வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கான செயல் திட்டம், பிசிசிஐ (BCCI) மற்றும் தேர்வாளர்களுக்கு இடையேயான கூட்டத்தில் விரைவில் முடிவு செய்யப்படும். இந்தப் போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், சிறந்த பிளேடிங் 11 வீரர்களைக் களமிறக்கும் தனது நிலைப்பாட்டில் அணி நிர்வாகம் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

ALSO READ: சுதர்சன் வெளியேற்றம்.. படிக்கலுக்கு வாய்ப்பு.. AFG எதிரான இந்திய உத்தேச அணி!

பும்ராவிற்கு வாய்ப்பு கிடைக்குமா?

ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் உடற்தகுதி மற்றும் சோர்வுதான் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி பிளேஆஃப் சுற்றிலிருந்து வெளியேறியதால் பும்ராவுக்கு ஓரளவு ஓய்வு கிடைக்கலாம். ஆனால் பிசிசிஐ அவரது பணிச்சுமை குறித்து எப்போதும் எச்சரிக்கையாகவே இருக்கும். எனவே, அவரைப் பற்றிய இறுதி முடிவு விரிவான கலந்துரையாடல்களுக்குப் பிறகே எடுக்கப்படும்.

மறுபுறம், முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் உள்ளனர். குஜராத் அணி பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றால், டெஸ்ட் போட்டிக்கு முந்தைய தயாரிப்புக்கு அவர்கள் இருவருக்கும் மிகக் குறைந்த நேரமே கிடைக்கும். இருப்பினும், பணிச்சுமையைக் கையாளும் அதிகத் திறன் சிராஜிடம் இருப்பதாக நம்பப்படுகிறது. இதற்கிடையில், ஆகாஷ் தீப் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் காயம் காரணமாகத் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை.

புதிய முகங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

தேர்வாளர்கள் சில இளம் வேகப்பந்து வீச்சாளர்களைக் கண்காணித்து வருவதுடன், ஐபிஎல் தொடரின் போது அவர்களின் பணிச்சுமையை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தியா ‘ஏ’ அணியில் இடம்பெற்றிருந்த அன்ஷுல் கம்போஜ் மற்றும் குர்னூர் பிரார் ஆகிய இருவரும் தேர்வுக்கான போட்டியில் உள்ளனர். முதல் தர கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஆகிப் நபி, இந்தியா ‘ஏ’ அணியில் இடம்பெறவில்லை என்றாலும், கவனிக்கப்பட்டு வருகிறார். வேகப்பந்து வீச்சில் ஆல்-ரவுண்டராக நிதிஷ் குமார் ரெட்டியும் இடம் பெறலாம்.

ALSO READ: டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு.. அசத்திய வங்கதேச அணி!

முழு பலம்:

வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஒப்பிடும்போது, ​​முக்கிய பேட்ஸ்மேன்கள் விஷயத்தில் சமரசம் செய்துகொள்வதற்கான வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது. டெஸ்ட் கேப்களை எளிதில் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று பிசிசிஐ கருதுவதால், பேட்டிங் வரிசை முழு பலத்துடன் களமிறங்க வாய்ப்புள்ளது. இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் கிட்டத்தட்ட அனைவரும் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர். எனவே, பேட்டிங் பிரிவில் இறுதி முடிவை எடுப்பது பிசிசிஐக்கு எளிதாக இருக்காது.

Follow Us