Team India: OG இஸ் பேக்..? ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்.. முக்கிய பவுலரை களமிறக்கும் இந்தியா?
Mohammed Shami Return: அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு, 2026 மே மாதத்தின் பிற்பகுதியிலோ அல்லது அடுத்த வாரத்திலோ பிசிசிஐ அதிகாரிகளைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பில் இந்திய கிரிக்கெட்டில் டெஸ்ட் அணியின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஐபிஎல் 2026 (IPL 2026) முடிவடைந்த பிறகு, இந்திய கிரிக்கெட் அணி தனது சர்வதேச போட்டிகளில் மீண்டும் கவனம் செலுத்த இருக்கிறது. ஐபிஎல் 2026 சீசன் முடிந்த கையோடு இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு (IND vs AFG) எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. இதனை தொடர்ந்து, இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளன. இதற்கிடையில், டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின் அறிக்கையின்படி, இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலம் குறித்து விவாதிக்க பிசிசிஐ விரைவில் ஒரு கூட்டத்தை நடத்தக்கூடும் என்று தெரிவித்துள்ளது. இதில், நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியின் அனுபவ பந்துவீச்சாளருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
ALSO READ: வங்கதேசத்திடம் பாகிஸ்தான் படுதோல்வி.. இந்திய அணிக்கு சாதகமாக அமைந்த ஐசிசி டெஸ்ட் தரவரிசை!
விரைவில் கூடும் தேர்வுக்குழு:
டைம்ஸ் ஆஃப் இந்தியா தகவலின்படி, அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு, 2026 மே மாதத்தின் பிற்பகுதியிலோ அல்லது அடுத்த வாரத்திலோ பிசிசிஐ அதிகாரிகளைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பில் டெஸ்ட் அணியின் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வரவிருக்கும் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் தங்களது சிறந்த ஆடும் லெவனைக் களமிறக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான வேகப்பந்து வீச்சுத் தாக்குதல் குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு, ஐபிஎல் 2026 பிளேஆஃப் சுற்றுக்கு எந்த அணி முன்னேறுகிறது என்பதைத் தேர்வாளர்கள் கருத்தில் கொள்ள இருக்கின்றனர்.




பிசிசிஐ வட்டாரங்களின்படி, ஐபிஎல் 2026 தொடரிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேற்றப்பட்டதால், ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறும் சாத்தியமான போட்டியாளராக உறுதி செய்யப்பட்டுள்ளார். ஹர்ஷித் ராணா மற்றும் ஆகாஷ்தீப் ஆகியோர் தற்போது காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க இயலாது. இதற்கிடையில், வேகப்பந்து வீச்சாளர்களான முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா சிறப்பான ஃபார்மில் இருப்பதால், குஜராத் டைட்டன்ஸ் அணி கிட்டத்தட்ட பிளேஆஃப் இடத்தை உறுதி செய்துள்ளது.
ALSO READ: பும்ரா, சிராஜூக்கு ஓய்வு..? ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் யார் களம்..?
முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படுமா..?
உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் முகமது ஷமி, 2023-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஷமிக்கு மற்றொரு வாய்ப்பு கொடுப்பது குறித்து தேர்வாளர்கள் பரிசீலிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், அன்ஷுல் கம்போஜ் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வேகப்பந்து வீச்சாளர்களையும் பிசிசிஐ கண் வைத்துள்ளது. இது மட்டுமின்றி, குர்னூர் பிராருக்கும் வாய்ப்பு கிடைக்கக்கூடும்.