IND vs AFG: காயத்தால் தவிக்கும் இந்திய அணி.. பிரின்ஸ் யாதவை களமிறக்க திட்டம்!
IND vs AFG ODI Series: சாய் சுதர்சனுக்குப் பதிலாக 3-வது இடத்தில் இந்திய டெஸ்ட் அணியில் தேவ்தத் படிக்கல் மீண்டும் இடம்பெற வாய்ப்புள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சுதர்சன் இந்திய அணிக்காக 3வது இடத்தில் களமிறங்கினார். அதேசமயம் படிக்கல் கடந்த ஆண்டு சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவிடம் 2-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்தார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் தொடரில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ் தனது முதல் இந்திய அணி அழைப்பிற்கு பரிசீலிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நடைபெற்று வரும் ஐபிஎல் 2026 சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டவர்களில் பிரின்ஸ் யாதவும் ஒருவர். பிடிஐ-யின் அறிக்கையின்படி, அஜித் அகர்கர் தலைமையிலான தேசிய தேர்வுக் குழு, ஆப்கானிஸ்தான் தொடருக்கு முன்னதாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பணிச்சுமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. அதன்படி, பும்ராவிற்கு ஒருநாள் போட்டிகளிலோ அல்லது ஒரேயொரு டெஸ்ட் போட்டியிலோ ஓய்வளிக்க வாய்ப்புள்ளது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் (IND vs AFG) அணிகளுக்கு இடையேயான ஒரேயொரு டெஸ்ட் போட்டியானது வருகின்ற 2026 ஜூன் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை புது சண்டிகரில் நடைபெற உள்ளது.
ALSO READ: OG இஸ் பேக்..? ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்.. முக்கிய பவுலரை களமிறக்கும் இந்தியா?
தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) தொடரில் இந்த டெஸ்ட் போட்டி இடம்பெறாது என்றாலும், இந்த போட்டி குறித்து பிசிசிஐ அதிக கவனத்தை கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வருகின்ற 2026 ஜூன் 14 முதல் 20 வரை 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறும். பிடிஐ தகவலின்படி, உள்நாட்டுப் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடும் பிரின்ஸ் யாதவ், ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம்பிடிக்க பரிசீலிக்கப்படலாம். தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2026 தொடரில் எல்எஸ்ஜி அணிக்காக பிரின்ஸ் யாதவ் 12 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளார்.




உள்ளூர் தொடர்களிலும் சிறப்பான பந்துவீச்சு:
விஜய் ஹசாரே கோப்பையிலும் டெல்லி அணிக்காக சிறப்பாக விளையாடிய பிரின்ஸ் யாதவ், 8 போட்டிகளில் 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கொல்கத்தா அணியில் இடம் பெற்றிருந்த ஹர்ஷித் ராணா இன்னும் காயம் காரணமாக விளையாடாததாலும், அவர் விரைவில் திரும்புவதற்கு வாய்ப்பில்லாததாலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தனது திறமையை நிரூபிக்க தேர்வாளர்கள் பிரின்ஸ் யாதவ்-க்கு ஒரு வாய்ப்பு அளிக்கக்கூடும்.
தேவ்தத் படிக்கல் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் வாய்ப்பு..?
சாய் சுதர்சனுக்குப் பதிலாக 3-வது இடத்தில் இந்திய டெஸ்ட் அணியில் தேவ்தத் படிக்கல் மீண்டும் இடம்பெற வாய்ப்புள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சுதர்சன் இந்திய அணிக்காக 3வது இடத்தில் களமிறங்கினார். அதேசமயம் படிக்கல் கடந்த ஆண்டு சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவிடம் 2-0 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்தார். படிக்கல் உள்ளூர் போட்டிகளிலும் ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்து ரன்களைக் குவித்து வருவதால், அவருக்கு டெஸ்ட் அணியில் மீண்டும் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டிக்கான அணியில் தேர்வாளர்கள் பெரிய மாற்றங்களைச் செய்ய வாய்ப்பில்லை. மேலும், கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான முக்கிய வீரர்கள் அதே அணியில் நீடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பும்ரா இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை என்றால், ரஞ்சி கோப்பையில் தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் அகிப் நபி 3வது வேகப்பந்து வீச்சாளராக அணியில் தேர்ந்தெடுக்கப்படலாம்.
ALSO READ: சுதர்சன், படிக்கல் புறக்கணிப்பு.. முத்தரப்பு தொடருக்கான இந்திய அணி விவரம்!
அனுபவ வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா அல்லது முகமது சிராஜுடன் இணைந்து பந்துவீச்சுத் தாக்குதலை வழிநடத்தலாம். படிக்கல் அணியில் இடம்பெறவில்லை என்றால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 3-வது இடத்தில் துருவ் ஜூரல் அல்லது வாஷிங்டன் சுந்தரை தேர்வாளர்கள் தேர்வு செய்யலாம்.