AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

India A Team: சுதர்சன், படிக்கல் புறக்கணிப்பு.. முத்தரப்பு தொடருக்கான இந்திய அணி விவரம்!

India A Squad For ODI Tri Series: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், ஐபிஎல் 2026 தொடரில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். தற்போது, ​​அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் புவனேஷ்வர் முதலிடத்தில் இருப்பதோடு, பர்ப்பிள் கேப்பையும் தன்வசம் வைத்துள்ளார். இருப்பினும், அப்படியிருந்தும் அவர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.

India A Team: சுதர்சன், படிக்கல் புறக்கணிப்பு.. முத்தரப்பு தொடருக்கான இந்திய அணி விவரம்!
சாய் சுதர்சன் - தேவ்தத் படிக்கல்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 May 2026 18:46 PM IST

ஐபிஎல் 2026 சீசன் (IPL 2026) நடைபெற்று வரும் நிலையில், அடுத்த மாதம் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் முத்தரப்புத் தொடரில் விளையாடவுள்ள இந்திய ‘ஏ’ அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியா, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் ‘ஏ’ அணிகள் வருகின்ற 2026 ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. இந்த தொடரானது வருகின்ற 2026 ஜூன் 14ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டனாக திலக் வர்மாவும் (Tilak Varma), துணை கேப்டனாக ரியான் பராக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். 15 பேர் கொண்ட இந்த அணியில், ஐபிஎல் 2026 சீசனில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், பிரப்சிம்ரன் சிங்கும் அணியில் இடம்பெற்றுள்ளார். இளைஞர்கள் நிறைந்த இந்த அணியில், தேர்வாளர்கள் சில முக்கிய வீரர்களை புறக்கணித்துள்ளனர்.

ALSO READ: இந்திய அணிக்கு சஞ்சுவை கேப்டனாக கொண்டு வாங்க.. முன்னாள் பயிற்சியாளர் வலுவான குரல்!

அனுபவ வீரர்களுக்கும் கிடைக்காத வாய்ப்பு:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், ஐபிஎல் 2026 தொடரில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். தற்போது, ​​அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் புவனேஷ்வர் முதலிடத்தில் இருப்பதோடு, பர்ப்பிள் கேப்பையும் தன்வசம் வைத்துள்ளார். இருப்பினும், அப்படியிருந்தும் அவர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. புவனேஷ்வர் ‘ஏ’ அணியில் சேர்க்கப்பட்டிருந்தால், இந்திய அணியில் சேர்வதற்கான வாய்ப்பை அவர் தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்டிருப்பார். ஆனால் அது நடக்கவில்லை. புவனேஷ்வர் குமாரைப் போலவே, அனுபவமிக்க பந்து வீச்சாளர் முகமது ஷமியும் தேர்வாளர்களால் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளார். புவனேஷ்வர் மற்றும் ஷமி ஆகிய இருவரும் இந்திய ‘ஏ’ அணியின் இடம் இல்லை. எனவே அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பையில் இருவருக்கும் இடம் கிடைப்பது கடினம் என கூறப்படுகிறது.

ALSO READ: இன்னும் 3 போட்டிகளே.. சிஎஸ்கே பிளே ஆஃப் செல்லுமா..? சமன்பாடு என்ன..?

பிரின்ஸ், படிதார் மற்றும் சுதர்ஷன் ஆகியோரும் புறக்கணிப்பு:

ஐபிஎல் 2026-ல் சிறப்பாகச் செயல்பட்ட இளம் வீரர்களான பிரின்ஸ் யாதவ், ரஜத் படிதார் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த 3 வீரர்களும் ஐபிஎல் 2026 சீசனில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். எல்.எஸ்.ஜி அணிக்காக விளையாடும் இளம் வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ், தனது பந்துவீச்சால் அனைவரையும் கவர்ந்துள்ள நிலையிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பதிதாரும் மிடில் ஆர்டரில் தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரரான சாய் சுதர்ஷன், ஐபிஎல் 2026-ல் 500 ரன்களுக்கு மேல் எடுத்தார், ஆனாலும் அவருக்கு இந்திய ‘ஏ’ அணியில் இடம் கிடைக்கவில்லை.

2026ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டிக்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி

இந்திய ஏ கிரிக்கெட் அணி:

திலக் வர்மா (கேப்டன்), பிரியான்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக் (துணை கேப்டன்), ஆயுஷ் படோனி, நிஷாந்த் சிந்து, ஹர்ஷ் துபே, சூர்யான்ஷ் ஷெட்ஜ், பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), குமார் குஷாக்ரா (விக்கெட் கீப்பர், யுஷ்விர் சிங், நிகாம் விப்ராஜ், அன்ஷூல் கம்போஜ், அர்ஷத் கான்.

Follow Us