RCB vs PBKS : பஞ்சாபை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி
IPL 2026 : ஐபிஎல் 2026 சீசனில் மே 17, 2026 அன்று நடைபெற்ற போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆர்சிபி அணி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
ஐபிஎல் 2026 சீசனில் மே 17, 2026 அன்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் மூலம் 6வது முறையாக பஞ்சாப் தொடர்ந்து தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 2026 சீசனில் 61வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஒரு பிரம்மாண்டமான வெற்றியைப் பதிவு செய்தது. 222 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரை எட்டிய ஆர்சிபி, பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. இதற்கிடையில், இந்த தோல்வியானது பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் பயணத்தை இன்னும் கடினமாக்கியுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு ஒரு சுமாரான தொடக்கமே கிடைத்தது. துவக்க வீரர் ஜேக்கப் பெத்தேல் 11 ரன்களில் ஆட்டமிழந்து அதிரச்சியளித்தார். இருப்பினும் கடந்த போட்டியில் சதம் அடித்த விராட் கோலி, இந்தப் போட்டியிலும் தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தார்; 37 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 58 ரன்களைக் குவித்தார். தேவ்தத் படிக்கலும் 45 ரன்களைச் சேர்த்ததுடன், விராட் கோலியுடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஒரு சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.
இதையும் படிக்க : IPL 2026: இன்னும் 11 போட்டிகள் மட்டுமே.. பிளே ஆஃப் செல்ல எந்த அணிகளுக்கு வாய்ப்பு?




தளபதி விஜய்யின் ஸ்டைலில் கொண்டாடிய வெங்கடேஷ் ஐயர்
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்; 40 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 73 ரன்களைச் சேர்த்தார். அரைசதம் அடித்த வெங்கடேஷ் ஐயர் அதனை மெர்சல் பட தளபதி விஜய் ஸ்டைலில் கொண்டாடினார். டிம் டேவிட் 12 பந்துகளில் 28 ரன்களைச் சேர்த்து சிறப்பான இன்னிங்ஸை விளையாடினார். மறுபுறம், பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் ஹர்பிரீத் பிரார் 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பஞ்சாபிற்கு மோசமான தொடக்கம்
அதனைத் தொடர்ந்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகப்பெரிய இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு ஒரு மோசமான தொடக்கம் அமைந்தது. முதல் ஓவரிலேயே புவனேஷ்வர் குமாரின் பந்தில் பிரியான்ஷ் ஆர்யா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் பிரப்சிம்ரன் சிங்கை 2 ரன்களில் வெளியேறினார். அதன்பிறகு, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும் வெறும் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் அந்த அணி தடுமாறியது. இந்த நிலையில் இக்கட்டான சூழலில் கூப்பர் கொன்னோலி, 37 ரன்கள் எடுத்தார். இளம் பேட்ஸ்மேனான சூர்யான்ஷ் ஷெட்ஜ் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையும் படிக்க : IPL 2026: கடைசி போட்டியில் கால் வைக்கும் எம்.எஸ்.தோனி.. சேப்பாக்கத்தில் ஓய்வு..?
அதன்பிறகு, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், ஆட்டத்தின் இறுதியில் அணிக்காகத் தனி ஒருவனாகப் போராடிய ஷஷாங்க் சிங், 27 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார். இருப்பினும், அணியை வெற்றியின் விளிம்பு வரை அழைத்துச் செல்ல அவரால் இயலவில்லை.20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 199 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனையடுத்து ஆர்சிபி அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.