BBL 2026-27: சென்னையில் முதல்முறை பிக் பாஷ் லீக்.. ஒப்புதல் அளித்த பிசிசிஐ.. எப்போது நடைபெறுகிறது?
Big Bash League in Chennai: கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது லீக்கின் உலகளாவிய இருப்பை விரிவுபடுத்தும் விருப்பத்தைக் கருத்தில் கொண்டால், இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதன்படி, கிரிக்கெட் ரசிகர்களும் வீரர்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர். தற்போதைய தகவல்களின்படி, பிக் பாஷ் லீக் 2026-இன் தொடக்கப் போட்டி இந்தியாவில் நடைபெறும்.
பெரும்பாலான முக்கிய நாடுகள் தங்களின் சொந்த டி20 கிரிக்கெட் லீக்குகளை நடத்துகின்றன. அவற்றில், ஐபிஎல் (IPL 2026) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அடுத்ததாக, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவால் ஏற்பாடு செய்யப்படும் பிக் பாஷ் லீக் உள்ளது. வரவிருக்கும் பிக் பாஷ் லீக் சீசன் அதன் 16வது பதிப்பாகும், இதன் போட்டிகள் வருகின்ற 2026 டிசம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது லீக்கின் உலகளாவிய இருப்பை விரிவுபடுத்தும் விருப்பத்தைக் கருத்தில் கொண்டால், இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. அதன்படி, கிரிக்கெட் ரசிகர்களும் வீரர்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர். தற்போதைய தகவல்களின்படி, பிக் பாஷ் லீக் 2026-இன் தொடக்கப் போட்டி இந்தியாவில் நடைபெறும்.




ALSO READ: பஞ்சாப் தொடர்ந்து 6 தோல்வி.. ப்ரீத்தி ஜிந்தா அப்செட்.. வைரலாகும் வீடியோ!
இந்தியாவில் பிபிஎல் போட்டி எப்போது, எங்கு நடைபெறும்?
🚨 BIGGEST STORY OF THE DAY – BIG BASH IS COMING TO INDIA 🚨
Chennai will host the Opening match of BBL 2026-27 in December 🤯Cricket Australia’s delegation, including top officials Phil Rigby and Margot Harley, recently conducted a recce at the Chepauk Stadium to assess the… pic.twitter.com/Q08iEJB53F
— Cricket Central (@CricketCentrl) May 18, 2026
கிடைத்த தகவல்களின்படி, 2026-27 பிக் பாஷ் லீக்கின் முதல் போட்டி சென்னையில் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் (எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம்) நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கு பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு வெளியே ஒரு பிபிஎல் போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இந்த லீக்கின் 16வது பதிப்பு வருகின்ற 2026 டிசம்பர் 2ம் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ போட்டி அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ALSO READ: சிஎஸ்கே நிலைமை என்ன? ஏதும் வாய்ப்புள்ளதா? ஐபிஎல் புள்ளி பட்டியல் சொல்வதென்ன?
5 பேர் கொண்ட கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆய்வு குழு:
ஐபிஎல் 2026 சீசனின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையிலான சேப்பாக்கத்தில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியின்போது ஆய்வு செய்வதற்காக, 5 பேர் கொண்ட கிரிக்கெட் ஆஸ்திரேலியா குழு ஒன்று சென்னையில் இருந்தது. பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸும் அங்கு உடனிருந்து, உறுப்பினர்களைச் சந்தித்தார். முன்னதாக, கிரிக்கெட் ஆஸ்திரேலியா இந்தியாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டிகளை நடத்துவது குறித்து பரிசீலித்து வந்தது. ஆனால் தற்போது வரவிருக்கும் தொடரின் முதல் போட்டி மட்டுமே இந்தியாவில் நடைபெறும்.