AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஒரே நிகழ்ச்சியில் மு.க ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்.. கைக்குலுக்கி நலம் விசாரித்த காட்சிகள்..

MK Stalin - Nainar Nagendran: ஆலங்குளம் தொகுதி திமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் இல்லத் திருமண விழா சென்னை திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

ஒரே நிகழ்ச்சியில் மு.க ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்.. கைக்குலுக்கி நலம் விசாரித்த காட்சிகள்..
ஒரே நிகழ்ச்சியில் மு.க ஸ்டாலின் - நயினார் நாகேந்திரன்..
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 28 Aug 2026 07:01 AM IST

ஆகஸ்ட் 28, 2026: முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் ஒரே திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று, பரஸ்பரம் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. ஆலங்குளம் தொகுதி திமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் இல்லத் திருமண விழா சென்னை திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

மு.க ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன் சந்திப்பு:

இதே நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் பங்கேற்றிருந்தார். அப்போது இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். தொடர்ந்து இருவரும் கைகுலுக்கி, பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். இதுதொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அரசியல் களத்தில் இருவரும் எதிரெதிர் அணிகளில் பயணித்து வரும் நிலையில், நேரில் சந்தித்தபோது எந்தவித தயக்கமும் இன்றி கைகுலுக்கி நலம் விசாரித்துக் கொண்டது அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: செப்டம்பர் 2ஆம் தேதி வரை நீடிக்கும் மழை.. வெப்பநிலை எப்படி இருக்கும்?

சீமான் – மு.க.ஸ்டாலின் சந்திப்பும்:

இதேபோல், கடந்த ஜூன் மாதம் புதுச்சேரியில் நடைபெற்ற இயக்குநர் கௌதமன் மகள் திருமண விழாவிலும் மு.க.ஸ்டாலின் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துக் கொண்டனர். திருமண நிகழ்ச்சியில் அருகருகே அமர்ந்திருந்த இருவரும் சிரித்தபடி சிறிது நேரம் பேசிக் கொண்டனர். அந்தக் காட்சிகளும் அப்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றன.

மேலும் படிக்க: கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலைய திட்டம்.. ஒரே நாளில் சரிந்த ரியல் எஸ்டேட் சந்தை!!

மனோஜ் பாண்டியன் அரசியல் பயணம்:

ஆலங்குளம் தொகுதி திமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், கடந்த முறை அதிமுக சார்பில் போட்டியிட்டவர். அதிமுகவில் நிலவிய உட்கட்சி விவகாரங்களின் காரணமாக அவர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைவதற்கு முன்பாகவே மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார். 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட மனோஜ் பாண்டியன், 69,170 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

Follow Us