AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஒரே நாளில் தியேட்டரில் வெளியாகும் அப்பா – மகன் படம்… துல்கர் கொடுத்த ரியாக்‌ஷன்!

Dulquer Salmaan talks about father son movies | நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படமும், அவரது தந்தை மம்முட்டி நடிப்பில் வெளியான படமும் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாவது குறித்து துல்கர் வெளிப்படையாக பேசியது வைரலாகி வருகின்றது.

ஒரே நாளில் தியேட்டரில் வெளியாகும் அப்பா – மகன் படம்… துல்கர் கொடுத்த ரியாக்‌ஷன்!
மம்முட்டி மற்றும் துல்கர் சல்மான்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Nov 2026 12:20 PM IST

சினிமாவில் குறிப்பாக இந்திய சினிமாவில் வாரிசுகளின் வருகை என்பது மிகவும் இயல்பான ஒன்றாக உள்ளது. சினிமாவில் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் பிரபலங்களின் வாரிசுகள் அதே துறையில் இல்லை என்றாலும் சினிமாவில் ஏதேனும் துறையில் தங்களது வருகையை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் மம்முட்டியின் மகன் தான் நடிகர் துல்கர் சல்மான் (Actor Dulquer Salmaan). இவர் மம்முட்டியின் மகனாக சினிமாவிற்கு வருகை தந்து இருந்தாலும் தொடர்ந்து தனது சிறப்பான நடிப்பின் காரணமாகவும் கதை தேர்வில் மிகவும் கவனமாக செயல்பட்டதன் காரணமாகவும் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இவர் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி மற்ற தென்னிந்திய மொழிகளிலும் தொடர்ந்து நாயகனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் துல்கர் சல்மானின் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ஆகாசம்லோ ஓகா தாரா. இந்தப் படத்தின் புரமோஷன் விழாவில் பேசியபோது நடிகர் துல்கர் சல்மானிடம் அதே நாளில் அவரது தந்தை நடித்துள்ள ஓ.எம் படமும் வெளியாவது குறித்து கேள்வி எழுப்பப்படுகின்றது. அதற்கு துல்கர் சல்மான் கொடுத்த பதில் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஒரே நாளில் தியேட்டரில் வெளியாகும் அப்பா – மகன் படம்:

அதன்படி நடிகர் துல்கர் சல்மான் பேசியதாவது, இது உண்மையில் ஒரு வரம். நாங்கள் இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள், ஆனால் அப்பா தமிழ் படங்களில் நடிக்கிறார், நான் தெலுங்கு படங்களில் நடிக்கிறேன். ஆலகா லூவா பாடலில், அப்பா திரையில் தோன்றும் அந்த சியா தருணம் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அவருக்கு ஒரு தீவிர ரசிகன். இயக்குநர்கள் அவரை அந்த விதமாகக் காட்சிப்படுத்துவதைப் பார்ப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்றும் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஓ.எம் முதல் ஆகாசம்லோ ஓகா தாரா வரை… இந்த வாரம் எந்த படத்தை ஃபர்ஸ்ட் பார்க்க போறீங்க?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Sreeleela: அதில் நான் தவறான முடிவுகளை எடுத்துவிட்டேன் – மனம் திறந்த ஸ்ரீலீலா!

Follow Us