ப்ரீ சேல்சில் கலைகட்டும் ஓ.எம் படம்… கொண்டாட்டத்தில் படக்குழு!
O.M Movie Ticket Booking Update Here | தமிழ் சினிமாவில் நாளை நடிகர் தனுஷின் நடிப்பில் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஓ.எம். இந்தப் படத்தின் பிரீ சேல்சில் டிக்கெட் விற்பனை எவ்வளவு ஆகி உள்ளது என்பது குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் (Actor Dhanush). இவரது நடிப்பில் வரிசையாக படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் அவ்வபோது படங்களை இயக்கவும் செய்து வருகிறார். அது மட்டும் இன்றி படங்களை தயாரிப்பது, பாடல்கள் பாடுவது, பாடல்கள் எழுதுவது என சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவராக தனுஷ் வலம் வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கர படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் தற்போது அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிப்பில் ஓ.எம் என்ற படம் தமிழ் சினிமாவில் வெளியாக உள்ளது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி உள்ள இந்த ஓ.எம் படத்தில் வில்லனாக நடிகர் மம்முட்டி நடித்து உள்ளார். மேலும் தனுஷின் மனைவியாக ஸ்ரீலீலாவும் காவல்துறை அதிகாரியாக நடிகை சாய் பல்லவி மற்றும் பலர் நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




ப்ரீ சேல்சில் கலைகட்டும் ஓ.எம் படம்… கொண்டாட்டத்தில் படக்குழு:
இந்தப் படம் நாளை 20-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது. மேலும் இந்தப் படத்தின் டிக்கெட் முன்பதிவு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில் தற்போது வரை 200 கே அதிகமாக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இது குறித்து பதிவு ஒன்றை ஓ.எம் படக்குழு மகிழ்ச்சி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… ஆக்ஷனுக்கு ரெடியா… சூர்யாவின் 49-வது படத்தின் இயக்குநர் இவரா? வைரலாகும் தகவல்
ஓ.எம் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
200K+ tickets sold in BMS pre-sales! ❤️🔥
The anticipation meets the big screen TOMORROW🥁
#OMFromTomorrow
A @Rajkumar_KP Film
#OM @dhanushkraja @mammukka @Sai_Pallavi92 @SaiAbhyankkar #NaseeruddinShah @sreeleela14 #Indrans @RTakeStudios @wunderbarfilms @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams @Ezhil_DOP @kalaivananoffl @iamSandy_Off @kavya_sriram @kabilanchelliah @rajeevan69 @JamRokr @kuchirayar73 @HariSounddesign @Synccinema @agscinemas @archanakalpathi @aishkalpathi @PharsFilm @SitharaEnts @WarnerMusicIN #BinuGeorgeAlexander @DreamBig_film_s @jsujithnair @PenMovies #PenMarudhar @ThinkStudiosInd @divomusicindia @ManojMaddyMM @RIAZtheboss @parasriazahmed1 @teamaimpr
— Wunderbar Films (@wunderbarfilms) November 19, 2026
Also Read… நடிகர் சூரியின் 7-வது படத்தின் தற்போதைய நிலை என்ன? அப்டேட் இதோ