AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விஜய் ஆண்டனி செருப்பு அணியாமல் இருக்க இதுதான் காரணம்… அவரது மனைவி ஃபாத்திமா விளக்கம்!

Fathima Vijay Antony Recent Emotional Speech About Vijay Antony | தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நாயகனாகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் கடந்த சில ஆண்டுகளாக காலணி அணியாததற்கு என்ன காரணம் என்று அவரது மனைவி ஃபாதிமா விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனி செருப்பு அணியாமல் இருக்க இதுதான் காரணம்… அவரது மனைவி ஃபாத்திமா விளக்கம்!
குடும்பத்தினருடன் விஜய் ஆண்டனிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Nov 2026 17:53 PM IST

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்கள் பலபேர் திரையில் பார்ப்பதற்கு ரசிகர்களிடையே அதிக அளவில் பிடிக்கும். ஆனால் திரையைத் தாண்டி நிஜ வாழ்க்கையில் ஒரு மனிதனை அதே அளவிற்கு பிடிக்குமா என்றால் அது கேள்விக்குறியே. ஆனால் விஜய் ஆண்டனியை (Vijay Antony) இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல் நடிகராக மட்டும் இல்லாமல் ஒரு மனிதராக ரசிகர்களுக்கு அதிக அளவில் பிடிக்கும். அதற்கு காரணம் அவர் பொது இடங்களில் மற்றவர்களிடையே கனிவாக நடந்துகொள்வதே ஆகும். இப்படி இருக்கும் நிலையில் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா விஜய் ஆண்டனி கடந்த 2023-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த செய்தி அவரது குடும்பத்தினரை அதிக அளவில் பாதித்தது. மேலும் மீரா விஜய் ஆண்டனி எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்தும் அவரது இறப்பிற்கு பிறகு அதனை கன்னியம் குழையும் வகையிலும் யாரும் பேச வேண்டாம் என்றும் விஜய் ஆண்டனி கோரிக்கை வைத்து இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு தனது மூத்த மகளின் இறப்பிற்கு பிறகு பொது இடங்களிலும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போதும் விஜய் ஆண்டனி செருப்பு அணிவதை தவிர்த்து வருகிறார். மேலும் அவர் ஏன் அப்படி இருக்கிறார் என்று பேட்டியில் கேட்டபோது சும்மா தோனிச்சு அப்படி இருக்கேன் என்று பதிலளித்து இருந்தார்.

விஜய் ஆண்டனி செருப்பு அணியாமல் இருக்க இதுதான் காரணம்:

இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி படத்தின் விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஃபாத்திமா விஜய் ஆண்டனி ஏன் விஜய் ஆண்டனி செருப்பு அணிவதை தவிர்த்து வருவதாக வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் பேசியதாவது, வெளிநாடுகளுக்கு செல்லும் போது அங்கு இருந்து பல விலை உயர்ந்த செருப்புகளை தங்களது மகள் மீராவிற்காக வாங்கி வைத்து இருந்தோம். ஆனால் அவர் இறந்த பிறகு அந்த காலணிகளைப் பார்த்த விஜய் ஆண்டனி இனி தன் வாழ்நாள் முழுவதும் செருப்பு அணியக்கூடாது என்று முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படங்களுக்காக அல்லது அந்த இடத்தில் ஷூ போடவேண்டிய கட்டாயம் இருக்கும் இடத்தில் மட்டும் விஜய் ஆண்டனி அதனை அணிந்து கொள்வதாகவும் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… பிக்பாஸில் தர்பூசணியால் போட்டியாளர்களிடையே வெடித்த சண்டை… வைரலாகும் வீடியோ!

விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி படத்தின் எக்ஸ் தள பதிவு:

Also Read… நடிகர் சூர்யாவின் 48-வது படத்தின் தற்போதைய நிலை என்ன? வைரலாகும் அப்டேட்

Follow Us