பிக்பாஸில் தர்பூசணியால் போட்டியாளர்களிடையே வெடித்த சண்டை… வைரலாகும் வீடியோ!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தொடர்ந்து சண்டைகள் சாப்பாடு தொடர்பாகவே வந்துகொண்டு இருக்கின்றது. அந்த வகையில் இன்றைய எபிசோடில் தர்பூசணிக்கு போட்டியாளர்கள் இடையே சண்டை ஏற்படுவது போன்ற வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10) நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து போட்டியாளர்களிடையே சண்டைகள் நடைப்பெற்றுக் கொண்டே இருக்கின்றது. முந்தைய சீசன்களில் எல்லாம் போட்டியாளர்கள் இடையே சண்டை இருக்கும். ஆனால் குறிப்பிட்ட சிலர் தங்களுக்குள் நட்பு உறவை பலப்படுத்திக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த சீசனில் நண்பர்கள் என்று கூறிக்கொண்டால் ஒருவர் மீது ஒருவர் வைத்து இருக்கும் வன்மம் என்பது வெளிப்படையாக தெரிகிறது. மேலும் சாதாரண மனித உணர்வுகளில் கூட நமக்கு என்ன பலன் இருக்கும் அந்த நபருடன் நெருக்கமாக இருந்தல் என்பதில் போட்டியாளர்களிடையே எண்ணம் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கும் எந்த போட்டியாளரின் நட்பும் உணையாக இல்லை என்பது நன்றாக தெரியும்.
இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் போட்டியாளர்களிடையே சண்டை என்பது இல்லாமல் கடந்ததே இல்லை. இப்படி இருக்கும் நிலையில் இன்று 16-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு ஒளிபரப்பாக உள்ள எபிசோடிலும் சண்டை உள்ளது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
பிக்பாஸில் தர்பூசணியால் போட்டியாளர்களிடையே வெடித்த சண்டை:
அதன்படி இன்று 71-வது நாளிற்கான நான்காவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் இன்றைய நாளில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் தர்பூசணி வெட்டி சாப்பிடும் போது அன்சருக்கு மட்டும் இரண்டு துண்டுகள் கொடுக்கப்படுகின்றது. இதனை முனியம்மாள் முதலி கேள்வி எழுப்ப அதனைத் தொடர்ந்து மற்றப் போட்டியாளர்களும் கேள்வி எழுப்ப தொடர்ந்து இது ஒரு சண்டையாக மாறுகின்றது. இந்த சண்டையை இந்த வார கேப்டனாக தன்யா எப்படி சமாளிக்கிறார் என்பதே இன்றைய எபிசோடில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.




Also Read… ஜோ பட இயக்குநரின் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது?
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட வீடியோ:
Also Read… மாறுதலான எவிக்ஷன்.. கார் மூலமாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நபர் யார்? – ப்ரோமோ இதோ!