AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மதுரை தனிஷ்க் கொள்ளை.. இன்ஸ்டா மீனாட்சி தாய்க்கு தொடர்பா? விசாரணையில் அதிரடி காட்டிய போலீசார்!

Madurai Tanishq Jewelry Robbery : மதுரை தனிஷ்க் நகை கடையில் 15 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சியின் தாய் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டனர் .

மதுரை தனிஷ்க் கொள்ளை.. இன்ஸ்டா மீனாட்சி தாய்க்கு தொடர்பா? விசாரணையில் அதிரடி காட்டிய போலீசார்!
இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி தாய் சிந்து
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 16 Nov 2026 17:31 PM IST

மதுரையில் தனிஷ்க் நகைக் கடையில் 15 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சியின் தாய் வீட்டில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். மதுரை பழங்காநத்தம்- காளவாசல் பிரதான சாலை நேரு நகர் பகுதியில் தனிஷ்க் நகை கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில், கடந்த நவம்பர் 12- ஆம் தேதி இரவு கருப்பு நிற உடை அணிந்த மர்ம நபர் ரூ.21 கோடி மதிப்பிலான 15 கிலோ தங்கம், வைரம் நகைகளை கொள்ளையடித்து சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் நிஷாந்த் என்ற இளைஞர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

தனிஷ்க் கடையில் 15 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளை

அத்துடன், அவருக்கு உதவியாக இருந்ததாக அவரது தந்தை சுரேஷ் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலமும், நரேஷின் காதலியுமான மீனாட்சி நாச்சியார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் நகை கடையில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அனைத்தும் மதுரை மாடக்குளம் கண்மாய் கரை பகுதியில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து 15 கிலோ நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க: பணத்தாசை யாரை விட்டது! 2014 முதல் 2024 வரை கூட்டுறவு வழங்கியில் நடந்த மோசடி.. நாகர்கோவிலிலில் போலீசிடம் சிக்கிய 4 பேர்!

இன்ஸ்டாகிராம் பிரபலம் தாய் வீட்டில் சோதனை

இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சி நாச்சியாரின் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்ட நிலையில், இதன் தொடர்ச்சியாக, அவரது தாயும், இன்ஸ்டாகிராம் பிரபலமுமான திருப்பாலையில் உள்ள சிந்துவின் வீட்டிலும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அத்துடன், அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் ஏதேனும் அவரது வீட்டில் இருக்கிறதா. இந்த கொள்ளை சம்பவத்தில் அவருக்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா. வேறு ஏதேனும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனரா.

5 நாள்களாக போலீஸுக்கு தண்ணி காட்டியவர் கைது

என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்தனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, நகை கொள்ளையில் ஈடுபட்ட நரேஷ் என்ற இளைஞர் 5 நாட்களாக தலைமறைவாக இருந்து வந்தார். அவரை, போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றி போலீசாருக்கு தண்ணீர் காண்பித்து வந்தார். இந்த நிலையில், தர்மபுரியில் பேருந்தில் சென்று கொண்டிருந்த நரேஷை அம்மாவட்ட போலீசார் கைது செய்து மதுரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் படிக்க: ரூ.100 கோடி முறைகேட்டில் புழல் சிறையில் அடைப்பு.. 3- ஆவது முறையாக உயிர் நண்பன் அன்பிலை சந்தித்த உதயநிதி.. என்ன காரணம்!

Follow Us