AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை ஒத்திவைத்தது சத்யவான் சாவித்ரி படக்குழு – வெளியானது அப்டேட்

Sathyavan Savithiri Movie Pre-Release Event | தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள சத்யவான் சாவித்திரி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு.

ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை ஒத்திவைத்தது சத்யவான் சாவித்ரி படக்குழு – வெளியானது அப்டேட்
சத்யவான் சாவித்ரிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 16 Nov 2026 16:01 PM IST

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் (Actress Keerthy Suresh). சினிமா குடும்பத்தில் இருந்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க தொட்ங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் அவரது நடிப்பு வெகுவாக விமர்சனத்திற்கு உள்ளானது. அவரது முக பாவனைகளின் காரணமாக உருவ கேலியும் செய்யப்பட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ். அப்படி இருந்த கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் என்ற படத்தில் நடத்ததன் மூலம் பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. மேலும் தற்போது வரை அந்தப் படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷ் மக்களால் பாராட்டப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகே கீர்த்தி சுரேஷிற்கு கதையின் நாயகியாக நடிக்க பல வாய்ப்புகள் குவிந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகையாகவே வலம் வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி தமிழ் சினிமாவில் இறுதியாக டோரதி படத்தில் நடித்து இருந்தார். அவரின் கதாப்பாத்திரம் வெகுவாகப் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை ஒத்திவைத்தது சத்யவான் சாவித்ரி படக்குழு:

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் சத்யவான் சாவித்திரி. இந்தப் படத்தில் இவர் கதையின் நாயகியாக நடித்து உள்ள நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

மேலும் படம் வருகின்ற 20-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் படக்குழு தற்போது வெளியிட்டுள்ள பதிவில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை ஒத்திவைப்பதாகவும் விரைவில் எப்போது என்பது குறித்து தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஜேசன் Vs விஜய் சேதுபதி.. பிக் பாஸில் விஜய் சேதுபதி மற்றும் ஆடியன்ஸிடம் திமிரு காட்டிய ஜேசன் – தீயாய் பரவும் ப்ரோமோ!

சத்யவான் சாவித்ரி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… முற்றிலும் மாறுபட்டது…. ஓ.எம் படத்தில் ஸ்ரீலீலாவின் கதாபாத்திரம் எப்படி இருக்கும்? – ராஜ்குமார் பெரியசாமி பேச்சு!

Follow Us