கந்தனின் திருப்புகழ் ஓங்கி ஒலிக்க வேண்டிய திருச்செந்தூரில் கண்டவர்களுக்கெல்லாம் ‘அரோகரா’ முழக்கம் – நயினார் நாகேந்திரன் காட்டம்..
Nainar Nagendran: முருகப்பெருமானின் திருப்புகழ் ஒலிக்க வேண்டிய திருத்தலத்தில் அரசியல் தலைவர்களுக்காக அரோகரா முழக்கமிடுவது ஏன் என்றும், ஆறு நாட்கள் கடும் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபடுவதற்காக வரும் பக்தர்கள் முதலமைச்சரின் புகழைக் கேட்பதற்காகவா கோவிலுக்கு வருகிறார்கள் என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நவம்பர் 16, 2026: திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியின்போது, முருகனுக்கு அரோகரா என முழக்கமிட்டதுடன் முதலமைச்சர் விஜய் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் அரோகரா என பாடகர் வேல்முருகன் முழக்கமிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சூரசம்ஹாரத்தில் முதலமைச்சருக்கு அரோகரா முழக்கம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர். அப்போது சூரசம்ஹாரம் நிகழ்த்தப்பட்டபோது, முருகனுக்கு அரோகரா என பக்தர்கள் முழக்கமிட்டனர். அந்த வரிசையில் பாடகர் வேல்முருகன், முதலமைச்சர் விஜய்க்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் அரோகரா என முழக்கமிட்டார். இந்த சம்பவம் தற்போது அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வேல்முருகனுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்
திருக்கோவில்களை திரு. ஜோசப் விஜய் அவர்களின் புகழ்பாடும் அரசியல் மேடைகளாக மாற்ற முயற்சிக்கிறதா @TVKPartyHQ அரசு?
எம்பெருமான் முருகன், சூரபத்மன் எனும் அசுரனை வதம் செய்து தர்மத்தை நிலைநாட்டிய கந்த சஷ்டி திருநாளை முன்னிட்டு, நேற்றைய தினம் திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெற்ற ‘சூரசம்ஹாரம்’ நிகழ்வின் போது, ‘முருகனுக்கு அரோகரா’ என்ற வரிசையில் ‘முதலமைச்சருக்கு அரோகரா, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு அரோகரா’ என்று கோஷமிட்ட பாடகர் திரு. வேல்முருகனுக்கு எனது கடும் கண்டனங்கள்!
கந்தனின் திருப்புகழ் ஓங்கி ஒலிக்க வேண்டிய திருச்செந்தூர் திருத்தலத்தில், கண்டவர்களுக்கெல்லாம் ‘அரோகரா’ முழக்கமிடும் துணிச்சல் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது? கடந்த ஆறு நாட்களாகக் கடும் விரதமிருந்து, நாள் முழுவதும் கந்த சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்து, சிந்தையிலும் நெஞ்சிலும் எம்பெருமான் முருகனைச் சுமந்து நிற்கும் பக்தர்கள், திரு. ஜோசப் விஜய் அவர்களின் புகழைக் கேட்பதற்காகவா ஆண்டவனின் சந்நிதியில் கூடுகிறார்கள்? ஒருவேளை, அரசியல் அதிகாரமும் திரையுலகப் புகழும் இருப்பதால், பிரபஞ்சத்தைப் படைத்த கடவுளைவிட, திரு. ஜோசப் விஜய் எனும் சினிமா பிரபலம் உயர்ந்தவர் என்று இந்த மூடர் கூட்டம் கருதுகிறதா?
எவ்வித ஆன்மீகப் புரிதலோ அல்லது பற்றுதலோ இல்லாத ஒரு சினிமா பிரபலத்தை, இந்து சமய அறநிலையத்துறையின் அறங்காவலர் தேர்வுக் குழு உறுப்பினராக நியமித்தால், அதன் விளைவுகள் இப்படித்தான் இருக்கும். கோடிக்கணக்கான முருக பக்தர்களின் உணர்வுகளையும், ஆலயத்தின் ஆன்மீகப் புனிதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்ட திரு. வேல்முருகன் அவர்கள், உடனடியாக பொது மன்னிப்பு கோர வேண்டும்!
— Nainar Nagenthran (@NainarBJP) November 16, 2026
இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கண்டனப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “திருக்கோவில்களை ஜோசப் விஜய் அவர்களின் புகழ்பாடும் அரசியல் மேடைகளாக மாற்ற முயற்சிக்கிறதா தமிழக அரசு?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க: செக்கானூரணி லாக்கப் மரணம்.. ஓட்டுநரை போலீசார் அடித்து கொன்றனரா? போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அதிர்ச்சி தகவல்!
மேலும், கந்த சஷ்டி திருநாளில் திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியின்போது, முருகனுக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் முதலமைச்சருக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் அரோகரா என முழக்கமிட்ட பாடகர் வேல்முருகனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முருக பக்தர்களின் உணர்வுகளை இழிவுபடுத்தியதாக விமர்சனம்
முருகப்பெருமானின் திருப்புகழ் ஒலிக்க வேண்டிய திருத்தலத்தில் அரசியல் தலைவர்களுக்காக அரோகரா முழக்கமிடுவது ஏன் என்றும், ஆறு நாட்கள் கடும் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபடுவதற்காக வரும் பக்தர்கள் முதலமைச்சரின் புகழைக் கேட்பதற்காகவா கோவிலுக்கு வருகிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க: நெல்லூர் துனி இடையே கரையை கடக்கும் அக்வான் புயல்.. தமிழகத்தில் மழை இருக்குமா?
மேலும், ஆன்மீகப் புரிதலோ அல்லது பற்றுதலோ இல்லாத சினிமா பிரபலத்தை இந்து சமய அறநிலையத்துறையின் அறங்காவலர் தேர்வுக் குழு உறுப்பினராக நியமித்தால் இதுபோன்ற சம்பவங்கள்தான் நடைபெறும் என்றும் விமர்சித்துள்ளார்.
உடனடியாகப் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்
இறுதியாக, கோடிக்கணக்கான முருக பக்தர்களின் உணர்வுகளையும், ஆலயத்தின் ஆன்மீகப் புனிதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் செயல்பட்ட பாடகர் வேல்முருகன் உடனடியாகப் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.