இது பிக்பாஸ் வீடா இல்ல வன்ம குடோனா? லக்ஷ்மி பிரியா – முனியம்மாள் இடையே முற்றிய வாக்குவாதம்!
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி தொடர்ந்து 10 வாரங்கள் முடிவடைந்து தற்போது 11-வது வாரத்தை தொட்டு இருந்தாலும் தொடர்ந்து வீட்டில் உள்ள போட்டியாளர்களிடையே சண்டை மட்டும் குறையவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக மக்களிடையே அதிக வரவேற்பைப் பெறும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் தமிழ் (Bigg Boss Tamil_. இந்த நிகழ்ச்சி தமிழ் மொழியில் கடந்த 2017-ம் ஆண்டு முதன்முதலில் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தான் மாறுகின்றனர் தவிற போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் மனநிலையும் சண்டைபோடும் குணமும் மாறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி தொடர்ந்து 70 நாட்களைக் கடந்து தற்போது 71-வது நாளில் உள்ளது. ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை போட்டியாளர்களின் சண்டை மற்றும் வன்மத்தை கொட்டிக்கொள்ளும் குணமும் அப்படியே தான் இருக்கிறது. ஏன் அதிகம் ஆகி உள்ளது என்று கூட சொல்லலாம்.
மொத்தம் 24 போட்டியாளர்களுடன் சென்று கொண்டு இருக்கும் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தற்போது 11 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளது. இந்த நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு மாத கால மட்டுமே உள்ள இலையில் போட்டியாளர்களிடையே இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்கும் நிலையில் தினமும் வெளியாகும் எபிசோடுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.




லக்ஷ்மி பிரியா – முனியம்மாள் இடையே முற்றிய வாக்குவாதம்:
அந்த வகையில் இன்று 71-வது நாளிற்கான இரண்டாவது புரோமோ வீடியோவை பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் பிக்பாஸ் வீட்டில் உள்ள முனியம்மாள் மற்றும் லக்ஷ்மி பிரியா இடையே வாக்குவாதம் முற்றியது தெரிகிறது. மேலும் இவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து உரசிக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… அனிருத் செய்த அந்த உதவி… நெகிழ்ந்து பேசிய இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி!
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day71 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/gTxE2SYhOS
— Vijay Television (@vijaytelevision) November 16, 2026
Also Read… வாய்சொல் வீரன்… சக போட்டியாளர்களின் அதிருப்தியை பெற்ற ஜேசன் – வைரலாகும் புரோமோ வீடியோ!