AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

எலிகளை ஓட விரட்ட இந்த 4 தப்புங்களை உடனே நிறுத்துங்க!

Attract Mice: சமையலறையில் எலிகள் நுழைவதைத் தடுக்க, உலர் உணவுப் பொருட்களைக் காகிதம் அல்லது மெல்லிய பிளாஸ்டிக் பைகளில் வைக்காமல் காற்றுப்புகாத கண்ணாடி அல்லது கெட்டியான பிளாஸ்டிக் டப்பாக்களில் சேமிக்க வேண்டும். மேலும், இரவு நேரத்தில் செல்லப்பிராணிகளின் உணவைத் திறந்து வைப்பதைத் தவிர்ப்பதுடன், குப்பைத் தொட்டிகளை இறுக்கமாக மூடி சமையலறையை எப்போதும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.

எலிகளை ஓட விரட்ட இந்த 4 தப்புங்களை உடனே நிறுத்துங்க!
Image Source: unsplash
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 16 Nov 2026 13:00 PM IST

குளிர்காலச் சூழலில் வீடுகளுக்குள், குறிப்பாய் சமையலறைகளுக்குள் எலிகள் நுழைவது மிகவும் சாதாரணமான ஒன்றாக மாறிவிடுகிறது. வெப்பத்தைத் தேடி வரும் எலிகளுக்கு, சமையலறையில் உள்ள திறந்த உணவுப் பொட்டலங்கள், சிதறிய தானியங்கள் மற்றும் நறுமணம் வீசும் பொருட்கள் எளிதான விருந்தாக அமைகின்றன. இதனால் சமையலறையில் உள்ள உணவுப் பொருட்கள் சேதமடைவதுடன், பல்வேறு வகையான நோய்த்தொற்றுகளும் குடும்பத்தினருக்கு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே, ஸ்டீல் உல்லி மற்றும் சீலண்டுகளைப் பயன்படுத்தி இந்த ஓட்டைகளையும் வெடிப்புகளையும் உடனடியாக அடைப்பதன் மூலம் எலிகள் சமையலறைக்குள் நுழைவதை நிரந்தரமாகத் தடுக்கலாம்.

Also Read: குழந்தைகளின் கையில் ஸ்மார்ட்போன்.. அதிகரிக்கும் டிஜிட்டல் அடிமைத்தனம் – எச்சரிக்கும் ஆய்வுகள்!

காகிதப் பைகளில் உணவுப் பொருட்களை வைப்பதன் தீமைகள்

பலரும் மாவு, சர்க்கரை, அரிசி, பாஸ்தா போன்ற உலர் உணவுப் பொருட்களைக் கடைகளில் வாங்கியவாறே காகிதம் அல்லது மெல்லிய பிளாஸ்டிக் பைகளில் சமையலறை அலமாரிகளில் வைக்கின்றனர். ஆனால், எலிகள் மிக எளிதாக இத்தகைய மெல்லிய பைகளைக் கடித்துத் தின்று உணவைச் சேதப்படுத்திவிடும். எனவே, உலர் உணவுப் பொருட்களை காற்றுப்புகாத கெட்டியான பிளாஸ்டிக் அல்லது கண்ணாடிப் பாத்திரங்களில் இறுக்கமாக மூடி வைப்பது எலிகள் அணுகுவதைத் தடுத்து பாதுகாப்பை உறுதி செய்யும்.

செல்லப்பிராணி உணவு மற்றும் குப்பை மேலாண்மை

சமையலறை மற்றும் பயன்பாட்டு அறைகளில் இரவு நேரத்தில் செல்லப்பிராணிகளுக்கான உலர் உணவைத் திறந்து வைப்பது எலிகளை ஈர்க்கும் முக்கியக் காரணமாகும். மேலும், குப்பைக் கூடையை மூடிகள் இல்லாமல் திறந்த நிலையில் வைப்பதும், சமையலறை மேசைகளில் சிதறும் உணவுத் துகள்களை உடனுக்குடன் துடைக்காமல் விடுவதும் எலிகளுக்கு உகந்த சூழலை உருவாக்குகிறது. இரவு தூங்கச் செல்வதற்கு முன் சமையலறைத் தளங்களைச் சுத்தமாகப் பேணுவது எலிகளின் வரவை முழுமையாகத் தவிர்க்கும்.

எலிகள் நுழையும் இடைவெளிகளை அடைப்பது அவசியம்

உணவுப் பொருட்களை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும், வீட்டின் சுவர்கள் மற்றும் கதவு ஓரங்களில் உள்ள சிறிய இடைவெளிகள் வழியாக எலிகள் உள்ளே வரக்கூடும். கதவுகள், ஜன்னல்கள் மற்றும் சுவரோரத்தில் பென்சில் அளவுக்கு சிறிய இடைவெளி இருந்தாலும் எலிகளால் ஊடுருவ முடியும். எனவே, ஸ்டீல் உல்லி மற்றும் சீலண்டுகளைப் பயன்படுத்தி இந்த ஓட்டைகளையும் வெடிப்புகளையும் உடனடியாக அடைப்பதன் மூலம் எலிகள் சமையலறைக்குள் நுழைவதை நிரந்தரமாகத் தடுக்கலாம்.

Also Read: குழந்தைகளின் கையில் ஸ்மார்ட்போன்.. அதிகரிக்கும் டிஜிட்டல் அடிமைத்தனம் – எச்சரிக்கும் ஆய்வுகள்!

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

Follow Us