AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முசிறி – துறையூர் சாலை கோர விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

திருச்சி மாவட்டம் முசிறி - துறையூர் சாலையில் காதணி விழாவுக்குச் சென்ற செங்கல் சூளை தொழிலாளர்கள் பயணித்த கார் வேப்பமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

முசிறி – துறையூர் சாலை கோர விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!
கோப்பு புகைப்படம்
Deepan
Deepan | Published: 27 Nov 2026 13:43 PM IST

நவம்பர் 27, 2026: திருச்சி மாவட்டம், முசிறி – துறையூர் சாலையில் செங்கல் சூளை தொழிலாளர்கள் சென்ற கார் வேப்பமரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. காதணி விழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியபோது நிகழ்ந்த இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், மகாராஜபுரத்தில் உள்ள செங்கல் சூளையில் நாமக்கல் மாவட்டம், எருமைப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் பணியாற்றி வருகிறார். இவரது இல்லத்தில் கடந்த நவம்பர் 22ஆம் தேதி நடைபெற்ற காதணி விழாவில் பங்கேற்பதற்காக, அதே செங்கல் சூளையில் பணிபுரியும் பாவாடை, மாணிக்கம், சங்கிலி, ராஜேஷ், முருகன், சக்திவேல், சீதாராமன், சுப்பிரமணி, ராமலிங்கம், ராமர் ஆகிய 10 பேர் ஈக்கோ காரில் நாமக்கல் சென்றனர்.

மேலும் படிக்க: அமெரிக்கா- நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்ட 3 சுவாமி சிலைகள்.. தமிழக காவல்துறையிடம் ஒப்படைத்த தொல்லியல் துறை!

கட்டுப்பாட்டை இழந்து வேப்பமரத்தில் மோதிய கார்

விழா முடிந்து மாலை 4 மணியளவில் திருச்சி நோக்கி காரில் திரும்பியுள்ளனர். கோதூர்பட்டி அருகே சென்றபோது, ஓட்டுநர் ராஜேஷின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர வேப்பமரத்தில் பலமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி கடுமையாகச் சேதமடைந்தது. பாவாடை, மாணிக்கம், சங்கிலி, ஓட்டுநர் ராஜேஷ், முருகன் ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்த 5 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சக்திவேல், சீதாராமன், சுப்பிரமணி ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ராமலிங்கம் கடந்த 23ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில், இன்று ராமரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

விபத்துகளைத் தவிர்ப்பது எப்படி?

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், விபத்துக்கான துல்லியமான காரணம் விசாரணைக்குப் பிறகே தெரியவரும். அதிவேகம், கவனச்சிதறல், தூக்கக் கலக்கம், வாகனத்தின் தொழில்நுட்பக் கோளாறு ஆகியவை இதுபோன்ற விபத்துகளுக்கு வழிவகுக்கலாம். அதே சமயத்தில் 5 பேர் செல்லக்கூடிய காரில் 10 பேர் சென்றதும் ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க: கிண்டி சிறுவர் பூங்காவில் பறவைகள் உயிரிழப்பு – 3 நாட்களுக்கு பூங்கா மூடல்!

இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க, ஓட்டுநர்கள் வேக வரம்பைப் பின்பற்றுவதுடன் நீண்ட தூரப் பயணத்திற்கு முன்பு போதிய ஓய்வு எடுக்க வேண்டும். பிரேக், டயர் உள்ளிட்ட வாகன உதிரிபாகங்களைச் சரிபார்க்க வேண்டும். பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமாகப் பயணிகளை ஏற்றக்கூடாது. குறிப்பாக, கிராமப்புறச் சாலைகளில் மரங்கள், வளைவுகள் மற்றும் எதிரே வரும் வாகனங்களைக் கவனித்து மிதமான வேகத்தில் பயணிப்பது உயிரிழப்புகளைத் தடுக்க உதவும்.

 

Follow Us