AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தவெக ஆட்சியில் போதையில் புதையும் தமிழகம்.. எந்த மூலையில் உள்ளது சிங்கப்பெண் படை.. டிடிவி தினகரன் காட்டம்!

TTV Dhinakaran Condemns TVK Govt : தவெக ஆட்சியில் தமிழகம் போதையில் புதையும் நிலைக்கு சென்றிருப்பதாகவும், பெண்கள் பாதுகாப்புக்கு உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் படை எந்த மூலையில் உள்ள என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் டிடிவி. தினகரன் தெரிவித்தார்.

தவெக ஆட்சியில் போதையில் புதையும் தமிழகம்.. எந்த மூலையில் உள்ளது சிங்கப்பெண் படை.. டிடிவி தினகரன் காட்டம்!
டிடிவி தினகரன்- முதல்வர் விஜய்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 30 Oct 2026 20:40 PM IST

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி அருகே கஞ்சா போதையில் பெற்ற தாயே அடித்து கொலை செய்த மகன்- போதை இல்லாத தமிழகத்தை உருவாக்கப் போவதாக கூறிய தூய சக்தி தமிழகத்தை போதையில் புதையும் சக்தியாக மாற்றி வருவது தான் மிச்சம். செலவுக்கு பணம் தர மறுத்ததால் கஞ்சா போதையில் பெற்ற தாயை அடித்து இளைஞர் கொண்டிருப்பது வேதனையை ஏற்படுத்துகிறது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இளைஞர்களின் எதிர்காலத்தை மட்டும் இன்றி சமூகத்தின் அமைதி, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை அடியோடு சீர்குலைக்கிறது. போதை பழக்கத்துக்கு அடிமையாகும் இளைஞர்கள் பணத்துக்காக கொலை, கொள்ளை, தாக்குதல், வழிப்பறி உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுவது வாடிக்கையாகி வருகிறது.

போதைப்பொருளை ஓழிப்பதில் தவெக அரசு தோல்வி

பெற்ற தாயின் உயிரை எடுக்கும் அளவுக்கு போதை வெறி தலைக்கு ஏறி இருப்பது போதைப்பொருள் ஒழிப்பிலும், சட்டம் ஒழுங்கை பார்ப்பதிலும் அரசு தோல்வி அடைந்திருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. தமிழகத்தின் தலைநகரம் தொடங்கி கடைக்கோடி கிராமங்கள் வரை ஆழமாக ஊறி இருக்கும் தஞ்சாவூர்லிந்த போதைப் பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த புழக்கத்தை கட்டுப்படுத்த மாவட்டம் தோறும் போதை பொருள் தடுப்பு படை அமைப்பதற்கு முதல் மூன்று கையெழுத்துகளில் ஒன்றாக கையெழுத்து போட்டதாக பெருமை பேசிய தூய சக்தி, இன்று கஞ்சா போதையால் நிகழ்ந்திருக்கும் இந்த படுகொலைக்கு என்ன பதில் சொல்லப் போகிறது.

மேலும் படிக்க: கரூரில் மின் இணைப்புக்கு விண்ணப்பித்த நபர்.. ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போர்மேன்.. லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை!

எந்த மூலையில் கிடக்கிறது சிங்கப்பெண் படை

நாளுக்கு நாள் பெண்கள், குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்களும், அவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதாக அமைக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதன் அடிப்படையில் எந்த மூலையில் முடங்கி கிடக்கிறது. மாவட்டம் தோறும் போதைப்பொருள் தடுப்பு படை அமைத்ததாக கூறிய தூய சக்தி, போதை பொருட்களின் மொத்த விற்பனையாளர்களையும் கடத்தல் பின்னணியில் செயல்படுவதையும் தனது கட்சியிலேயே வைத்துள்ளது.

போதை ஒழிப்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை தேவை

ஒரு புறம் போதை ஒழிப்பு குறித்து மேடைகளில் பேசுவதும், மறுபுறம் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் போதைப் பொருள்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறுவதும் தான் தூய சக்தியின் உண்மையான செயல்பாடா. பல கோடி ரூபாய் செலவு செய்து ரிலீஸுக்காக மாரத்தான் ஓடுவதால் மட்டும் போதை பொருட்களை ஒழித்து விட முடியாது. போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிப்பதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: மீண்டும் மீண்டுமா.. மீனாட்சியம்மன் கோவிலில் திடீர் மின்தடை.. துணை ஜனாதிபதி தரிசனத்தின்போது அதிர்ச்சி!

Follow Us