AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மீனாட்சி அம்மன் கோவிலில் விஐபி தரிசனத்தில் மின் தடை.. காரணம் என்ன? அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் விளக்கம்!

Minister CTR Nirmal Kumar : மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் விஜபி தரிசனத்தின்போது அடுத்தடுத்து இரு நாள்கள் மின் நிறுத்தம் ஏற்பட்டது குறித்து அந்தத் துறையின் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். அது என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மீனாட்சி அம்மன் கோவிலில் விஐபி தரிசனத்தில் மின் தடை.. காரணம் என்ன? அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் விளக்கம்!
அமைச்சர் நிர்மல் குமார்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 30 Oct 2026 21:09 PM IST

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று தரிசனம் மேற்கொண்டு இருந்தார். தரிசனம் முடிந்து அவர் வெளியே வந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, திடீரென கோவில் வளாகத்தில் மின்தடை ஏற்பட்டது. இதே போல, நேற்று வியாழக்கிழமை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனத்திற்கு சென்ற போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இந்த இரு நிகழ்வுகளும் பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக மின்சார துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: துணை ஜனாதிபதி இன்று மாலை சுமார் 5:35 மணிக்கு கோவிலுக்கு வருகை தந்தார். தரிசனம் முடிந்து 6:25 மணிக்கு வெளியேறினார்.

கோவில் வளாகத்தில் ஜெனரேட்டர் மூலமாக மின்சாரம்

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வருகையின் போது பிற்பகல் 3:30 மணி முதல் கோவில் முழுவதும் ஜெனரேட்டர் மூலமாக மின்சாரம் வழங்கப்பட்டது. பணி ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டிருந்தன. மேலும், உதவிக்காக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உதவி பொறியாளர் கோவில் மின் அறையில் இருந்தார். தரிசனத்திற்கு பிறகு துணை குடியரசு தலைவர் கிழக்கு கோபுரத்தின் முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கோவில் மின் அறையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கோவில் வளாகத்தில் மின்விநியோகம் தடைபட்டது.

மேலும் படிக்க: மீனாட்சி அம்மன் கோவிலில் திடீர் மின்வெட்டு.. நிம்மதியா தரிசனம் கூட பண்ணமுடியல.. எடப்பாடி புலம்பல்!

திடீர் மின்வெட்டுக்கான காரணம் இது தான்

இதை அறிந்த ஊழியர்கள் உடனடியாக விரைந்து மின்சாரம் ஜெனரேட்டரில் இருந்து மின்சார வாரியத்தின் விநியோகத்துக்கு மாற்றப்பட்டது. இந்த பணிகள் இரண்டு நிமிடங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்று விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில், நேற்று வியாழக்கிழமை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் தரிசனம் மேற்கொண்டு இருந்தார். அப்போது, ஏற்பட்ட திடீர் மின்வெட்டால் கோவில் கருவறை இருளில் மூழ்கியது.

விஐபி தரிசனத்தின்போது 2 நாள்கள் மின்வெட்டு

இதைத் தொடர்ந்து, வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு குறித்து வருத்தம் தெரிவித்து பேசியிருந்தார். இதை தொடர்ந்து, இன்று தமிழகம் வருகை தந்திருந்த துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பசும்பொன் சென்று விட்டு மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் மேற்கொண்டார். இந்த தரிசனம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, மின்வெட்டு ஏற்பட்டிருந்தது பேசும் பொருளானது. மீனாட்சி அம்மன் கோவிலில் வி ஐ பி தரிசனம் மேற்கொண்ட இரு நாட்களில் அடுத்தடுத்து மின்வெட்டு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: மீண்டும் மீண்டுமா.. மீனாட்சியம்மன் கோவிலில் திடீர் மின்தடை.. துணை ஜனாதிபதி தரிசனத்தின்போது அதிர்ச்சி!

Follow Us