AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மீண்டும் மீண்டுமா.. மீனாட்சியம்மன் கோவிலில் திடீர் மின்தடை.. துணை ஜனாதிபதி தரிசனத்தின்போது அதிர்ச்சி!

Vice President Dharsan Meenakshi Amman Temple : மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இந்திய துணை குடியரசு தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் தரிசனம் மேற்கொள்ள சென்றிருந்த போது திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது .

மீண்டும் மீண்டுமா.. மீனாட்சியம்மன் கோவிலில் திடீர் மின்தடை.. துணை ஜனாதிபதி தரிசனத்தின்போது அதிர்ச்சி!
மீனாட்சியம்மன் கோவிலில் சி.பி.ராதாகிருஷ்ணன்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 30 Oct 2026 20:06 PM IST

இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக இன்று வெள்ளிக்கிழமை ( அக்டோபர் 30- ஆம் தேதி) வருகை புரிந்திருந்தார். மதுரை வந்த அவர், பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதை தொடர்ந்து, மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக மாலை சுமார் 5:30 மணி அளவில் செய்திருந்தார். அவரை தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், அமைச்சர் ஜெகதீஸ்வரி, மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் துணை குடியரசுத் தலைவருக்கு மரியாதை அளிக்கப்பட்டது.

மீனாட்சியம்மன் கோவிலில் திடீர் மின் தடை

அவர், கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அஷ்ட சக்தி மண்டபத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென மீனாட்சியம்மன் கோவிலில் மின் தடை ஏற்பட்டது. சில வினாடிகள் நீடித்த இந்த மின் தடை மீண்டும் சரி செய்யப்பட்டு மின்வினியோகம் கிடைத்தது. ஆனால், சிறிது நேரத்திலேயே மீண்டும் மின் தடை ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பான சூழல் உருவானது. இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று வியாழக்கிழமை தரிசனம் செய்வதற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றிருந்தார்.

மேலும் படிக்க: பாவம் பார்த்த தாய்.. இரும்பு ராடால் பதம் பார்த்த மகன்.. ஜாமீனில் எடுத்த தாய்க்கு நேர்ந்த கதி.. தஞ்சாவூரில் பெரும் சோகம்!

எடப்பாடி பழனிசாமி தரிசனத்தின்போதும் மின் தடை

அப்போது, அவர் கருவறையில் தரிசனம் செய்து கொண்டிருந்தபோது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. சிறிது நேரம் நீடித்த இந்த மின்வெட்டு பின்னர் கோவில் ஊழியர்கள் மூலமாக சரி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, வெளியே வந்த எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் மக்கள் நிம்மதியாகவும் வாழ முடியவில்லை, நிம்மதியாகவும் தரிசனம் செய்ய முடியவில்லை என்று தெரிவித்துவிட்டு புறப்பட்டு சென்றார். இந்த நிலையில், இந்திய துணைக் குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனத்துக்கு வந்த நிலையில் மீண்டும் மின் தடை ஏற்பட்டிருப்பது மீண்டும் பேசும் பொருளாகி உள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து வரும் மின்வெட்டு

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வருகிறது. எதற்கு பல்வேறு தரப்பு பொதுமக்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட துறை சார்பில் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டிருந்தாலும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத திடீர் மின்வெட்டு நிகழ தான் செய்கிறது.

மேலும் படிக்க: பக்கத்து வீட்டார் வெளியூர் சென்றதை நோட்டமிட்டு சம்பவம்.. 45 பவுன் நகை- பணம் கொள்ளை.. திருப்பூரில் தாய், மகன் என குடும்பமே கைது!

Follow Us