பக்கத்து வீட்டார் வெளியூர் சென்றதை நோட்டமிட்டு சம்பவம்.. 45 பவுன் நகை- பணம் கொள்ளை.. திருப்பூரில் தாய், மகன் என குடும்பமே கைது!
Tiruppur Gold Stealing 5 Arrested : திருப்பூர் மாவட்டத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட நபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து 45 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்த சம்பவத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் கல்லூரி சாலை, மாஸ்கோ நகர் பகுதியில் வசித்து வருபவர் அருண் ராஜ். இவருடன் இவரது குடும்பத்தினர்களும் ஒன்றாக வசித்து வருகின்றனர். இவர், தற்போது மளிகை கடை நடத்தி வந்தார். கடந்த அக்டோபர் 18- ஆம் தேதி தசரா பண்டிகைக்காக தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். அங்கு, பண்டிகை முடிந்து கடந்த 23- ஆம் தேதி வீடு திரும்பிய நிலையில், வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 45 பவுன் தங்க நகைகள், ரூ. 1 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக, அருண் ராஜ் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பூட்டிய வீட்டில் 45 பவுன் தங்க நகைகள் கொள்ளை
அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. மேலும், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதில், அருண்ராஜ் வீட்டின் அருகே குடும்பத்துடன் வசித்து வந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த விஜய் என்பவரின் உருவம் பதிவாகி இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க: காரில் லிப்ட் கொடுத்து பாலியல் தொல்லை.. கல்லூரி மாணவி அளித்த புகார்.. கன்னியாகுமரி தவெக நிர்வாகி அதிரடி கைது!




நகைகளை விற்று பணத்தை பெற்ற குடும்பத்தினர்
அதன்படி, விஜயை அழைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், நகைகளை திருடியதை ஒத்துக் கொண்டார். அருண்ராஜ் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட விஜய் தனது நண்பர்களான தென்காசியை சேர்ந்த அப்துல் ரசாக், மவுலானா யூசுப் ஆகியோருடன் சேர்ந்து நகைகளை திருடியது தெரிய வந்தது. மேலும், திருடிய நகைகளை தனது தாய் அமராவதி, தங்கை சரண்யா, அவரது கணவர் ஆனந்த் ஆகியோர் உதவியுடன் பல்வேறு கடைகளில் விற்று பணத்தை பெற்றுள்ளனர்.
தாய், தங்கை உள்ளிட குடும்பத்தினர் கைது
இதை தொடர்ந்து, விஜய் அவருக்கு உடந்தையாக இருந்ததாக தாய் அமராவதி, தங்கை சரண்யா, மாமனார் ஆனந்த் மற்றும் நண்பர்கள் அப்துல் ரசாக் ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் தொடர்புடைய, மவுலானா யூசுப் ஏற்கனவே வேறொரு வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நிலையில், அவரிடம் இருக்கும் பணம், நகையை பறிமுதல் செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: செஞ்சியில் கோரம்.. 6 வயது சிறுவன் கிணற்றில் வீசி கொலை.. குடும்ப தகராறில் வெறி பிடித்த தந்தை கைது!