எத்தனை காலத்துக்குதான் பொய் வழக்குகளை எதிர்கொள்ளவது.. எதிர் வழக்குகளை தாக்கல் செய்ய முடிவு.. முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆவேசம்!
Raghupathy Criticizes TVK Government : திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மீது தமிழக வெற்றிக் கழக அரசு பதிவு செய்யும் பொய்யான வழக்குகள் எவ்வளவு நாள்தான் பொறுத்துக் கொள்வது என்றும், எதிர் வழக்குகள் தாக்கல் செய்வோம் என்றும் முன்னாள் அமைச்சர ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டை நகர் மன்றத்தில் திமுக சார்பில் இன்று வெள்ளிக்கிழமை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்றுவிட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழக அரசு தற்போது எந்த திட்டத்தை தொடங்கி வைத்தாலும் அது திராவிட மாடல் ஆட்சியின் செயல்படுத்தப்பட்ட திட்டம் தான். இதே போல திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் உள்ளிட்டவைகளை முதல்வர் திறந்து வைக்கப் போகிறார். இதுபோன்று தமிழக முழுவதும் தொடங்கப்பட்ட திட்டங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டதாகும். விராலிமலை சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த நீதிமன்றம் எப்போது அனுமதி அளிக்கிறதோ அப்போதுதான் இடைத்தேர்தல் நடைபெறும். எப்போது இடைத்தேர்தல் நடைபெற்றாலும் அதில் வெற்றி பெறப்போவது திமுக வேட்பாளர் தான்.
உதயசூரியன் பிரகாசிப்பதற்கான ஏற்பாடுகள் தயார்
தமிழக மக்கள் தமிழக வெற்றி கழக ஆட்சியில் ஏமாற்றத்தை சந்தித்து விட்டனர். உதயசூரியன் பிரகாசிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் தயார் செய்து விட்டோம். தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் விலைவாசி உயர்வு, காணாமல் போகும் சிறுமிகள் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் தடுமாறுவது உள்ளிட்டவைகளை கண்டு கோபத்தில் உள்ளனர். அதன் வெளிப்பாடு இடைத்தேர்தலில் தெரியும். விராலிமலை சட்டமன்ற தொகுதியில் திமுக பொறுப்பாளர்கள் தவெகவில் இணைந்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, உள்ளடி வேலை பார்த்தவர்கள் தற்போது வெளிப்படையாக கட்சியை விட்டு விலகி உள்ளனர்.
மேலும் படிக்க: கரூரில் மின் இணைப்புக்கு விண்ணப்பித்த நபர்.. ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போர்மேன்.. லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை!




தமிழகத்தில் நல்ல ஆட்சியை விஜயால் தரமுடியவில்லை
இதைப்பற்றி திராவிட முன்னேற்ற கழகம் கவலைப்படவில்லை. துரோகிகளை எங்களுடன் வைத்துக்கொள்ள மாட்டோம். தமிழக வெற்றிக் கழக அரசு அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளது. நல்ல ஆட்சியை விஜயால் தர முடியவில்லை. மக்களிடமிருந்து இந்த அரசு வெறுப்பை சம்பாதித்துள்ளது. இவை எல்லாம் மடை மாற்றுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல்வேறு வகைகளில் விமர்சனம் செய்து சோதனைகள் நடத்தி வருகின்றனர். பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி பழி போட்டுள்ளனர். அவைகளை தூள் தூளாக நீதிமன்றத்தின் மூலமாக நாங்கள் நிரூபித்து வெற்றி காண்போம்.
தவெக அரசின் பொய் வழக்குகளுக்கு எதிராக வழக்குகள்
லஞ்ச ஒழிப்பு சோதனையில் ஆவணங்களை கண்டுபிடித்துள்ளதாக கூறினாலும் அவை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து நிரூபிக்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் திமுகவினர் மீது பல்வேறு வழக்குகள் போட்டனர். அதனை தூள் தூளாக நொறுக்கி நிரபராதி என்று நிரூபித்து உள்ளோம். முதல்வர் எந்த பைலை ஓபன் செய்தாலும் நாங்கள் நிரபராதி என்று நிரூபித்தே தீருவோம். எவ்வளவு காலத்துக்கு தான் நாங்கள் பொய்யான வழக்குகளை எதிர்கொள்வது. இனி நீதிமன்றத்தில் எதிர் வழக்கு தொடுக்கப் போகிறோம் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: காரில் லிப்ட் கொடுத்து பாலியல் தொல்லை.. கல்லூரி மாணவி அளித்த புகார்.. கன்னியாகுமரி தவெக நிர்வாகி அதிரடி கைது!