AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Hardik Pandya: திருப்பதிக்கு காதலியுடன் வந்த ஹர்திக் பாண்ட்யா.. மொட்டையடித்து காணிக்கை நிறைவேற்றம்!

Hardik Pandya Visits Tirumala: திருமலை கோவிலில் தரிசனத்தின் போது, ​​ஹர்திக் பாண்டியா பாரம்பரிய வெள்ளை குர்தா மற்றும் பைஜாமா அணிந்திருந்தார். அவர் தனது தலையில் மொட்டை அடித்து, நெற்றியில் திலகம் இட்டுக்கொண்டார். அதேபோல், மஹிகா ஷர்மாவும் வெள்ளை நிற பாரம்பரிய உடையில் காணப்பட்டார்.

Hardik Pandya: திருப்பதிக்கு காதலியுடன் வந்த ஹர்திக் பாண்ட்யா.. மொட்டையடித்து காணிக்கை நிறைவேற்றம்!
திருப்பத்தில் காதலியுடன் ஹர்திக் பாண்ட்யா
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 02 Aug 2026 18:20 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, 2026 ஆகஸ்ட் 2ம் தேதியான இன்று ஆந்திரப் பிரதேசத்தின் திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலுக்குச் சென்றார். அப்போது, ​​அவரது காதலி என்று கூறப்படும் மஹிகா ஷர்மாவும் ஹர்திக் பாண்ட்யாவுடன் (Hardik Pandya) ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாலை தரிசனம் செய்தார். இருவரும் அதிகாலையில் நடைபெற்ற புகழ்பெற்ற வழிபாட்டில் கலந்துகொண்டு வெங்கடேஸ்வர சுவாமியின் ஆசிகளை பெற்றனர். கோயில் வளாகத்தில் மஹிகா ஷர்மாவும் ஹர்திக் பாண்ட்யாவும் இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ALSO READ: இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு.. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்.. பும்ரா காயத்தால் விலகல்!

மொட்டை அடித்த ஹர்திக் பாண்ட்யா:


திருமலை கோவிலில் தரிசனத்தின் போது, ​​ஹர்திக் பாண்டியா பாரம்பரிய வெள்ளை குர்தா மற்றும் பைஜாமா அணிந்திருந்தார். அவர் தனது தலையில் மொட்டை அடித்து, நெற்றியில் திலகம் இட்டுக்கொண்டார். அதேபோல், மஹிகா ஷர்மாவும் வெள்ளை நிற பாரம்பரிய உடையில் காணப்பட்டார். இருவரும் மிகுந்த நம்பிக்கையுடனும் பக்தியுடனும் கோவிலின் மத மரபுகளின்படி பூஜை செய்தனர்.

ஹர்திக்கும் மஹிகா ஷர்மாவும் கடந்த சில ஆண்டுகளாகவே பலமுறை பல இடங்களில் ஒன்றாக காட்சியளித்தனர். ஆனால், அவர்கள் இருவருமே தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இவர்கள் இருவரும் எப்போதும் சமூகத்தின் முன்பு ஒன்றாக காட்சியளிக்கும் போதெல்லாம் விவாதப் பொருளாக இருந்து வருகின்றன.

காயம் காரணமாக விலகிய ஹர்திக் பாண்ட்யா:

காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா தற்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில், வரவிருக்கும் கிரிக்கெட் சவால்களுக்கு முன்பு, இறைவனின் ஆசீர்வாதத்தைப் பெற ஹர்திக் பாண்ட்யா மற்றும் மஹிகா ஷர்மா திருப்பதி பாலாஜிக்குச் சென்றதை அவரது ரசிகர்கள் ஒரு புதிய பயணமாகவும் ஆன்மீகத் தொடக்கமாகவும் பார்க்கின்றனர். கோவிலிலிருந்து வெளிவரும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவதுடன், இருவருக்கும் வாழ்த்துக்களையும் அனுப்பி வருகின்றனர்.

ALSO READ: வேறு அணிக்கு செல்கிறாரா ஹர்திக் பாண்ட்யா..? விளக்கிய மும்பை இந்தியன்ஸ்!

ஹர்திக் பாண்ட்யா அணிக்கு திரும்புவது எப்போது..?

முதுகுத் தசைப்பிடிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடைத் தசை காயம் காரணமாக, ஹர்திக் பாண்டியா ஐபிஎல் 2026 சீசனுக்கு பிறகு இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார். கிடைத்த தகவல்களின்படி, ஹர்திக் முழு உடற்தகுதியுடன் இந்திய அணிக்குத் திரும்பத் தயாராக உள்ளார். மேலும், காயம் காரணமாக மீண்டும் அணிக்குத் திரும்ப விரும்பும் எந்தவொரு வீரரும், பிசிசிஐ-யின் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸில் நடைபெறும் ‘ரிட்டர்ன் டு ப்ளே’ நெறிமுறையை நிறைவு செய்ய வேண்டும். வரவிருக்கும் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்ட்யா விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us