AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sai Abhayankkar: ஒரு பாட்டுதான் போட்டு காமிச்சேன்.. அட்லீ அண்ணா சொன்னதும் ஆடிபோய்ட்டேன் – சாய் அபயங்கர்!

Sai Abhayankkar About Atlee: தென்னிந்திய மக்கள் மத்தியில் பிரபலமான இசையமைப்பாளராக பேசப்படுபவர் சாய் அபயங்கர். இவரின் 5வது இன்டீ பாடல் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியின்போது பேசிய சாய் அபயங்கர், அட்லீ மற்றும் அல்லு அர்ஜுனின் கூட்டணி பட இசையமைப்பாளராக எவ்வாறு ஒப்பந்தமானார் என்பது பற்றி தெரிவித்துள்ளார்.

Sai Abhayankkar: ஒரு பாட்டுதான் போட்டு காமிச்சேன்.. அட்லீ அண்ணா சொன்னதும் ஆடிபோய்ட்டேன் – சாய் அபயங்கர்!
அட்லீ மற்றும் சாய் அபயங்கர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 06 Mar 2026 11:39 AM IST

இசையமைப்பாளராக தமிழில் பிரபலமாகிவருபவர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar). தனது இளம் வயதிலே பல பிரம்மாண்ட படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகளை இவர் பெற்றுவருகிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) தயாரிப்பில் உருவாகிவரும் பென்ஸ் (Benz)என்ற படத்தின் இசையமைப்பாளராக முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்டார். இதையடுத்து மிகவும் பிரம்மாண்டமான திரைப்படங்களிலும் சாய் அபயங்கர் ஒப்பந்தமாகிவந்தார். இவரின் இசையில் தமிழில் வெளியான முதல் படம் டியூட் (Dude). கடந்த 2025ம் ஆண்டு வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் என்றே சொல்லலாம். இதையடுத்து சூர்யா முதல் அல்லு அர்ஜுன் (Allu Arjun) வரை பல்வேறு பிரபலங்களும் படங்களுக்கும் இசையமைக்கும் பணியில் தீவிரமாக இருக்கிறார்.

மேலும் பான் இந்திய அளவில் உருவாகிவரும், அல்லு அர்ஜுனின் AA22 படத்திற்கும் இவர்தான் இசையமைக்கவுள்ள நிலையில், அந்தப் படத்தில் எவ்வாறு ஒப்பந்தமானேன் என்பதை சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பூஜைகளுடன் தொடங்கியது ரவி மோகன் இயக்கும் அன் ஆர்டினரி மேன் பட ஷூட்டிங்!

அட்லீ மற்றும் அல்லு அர்ஜுனின் AA22 திரைப்படத்தில் ஒப்பந்தமானது பற்றி சாய் அபயங்கர்:

சமீபத்தில் பவழ மல்லி பாடல் ரிலீஸின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சாய் அபயங்கர், அதில், “தற்போது அல்லு அர்ஜுன் சார் மற்றும் அட்லீ அண்ணாவின் படத்தின் இசையமைப்பு பணி நடந்துகொண்டிருக்கிறது. எனக்கு இரண்டாவது நம்பிக்கை கொடுத்தது அட்லீ அண்ணா மற்றும் விவேக் அண்ணாதான். நான் அட்லீ அண்ணா குறித்து பேசி ஆகவேண்டும், அவர் என்னை முதல் முறை சந்திக்கும்போது நான் ஒரு படம் கூட ஒப்பந்தமாகவில்லை.

இதையும் படிங்க: நான் அந்த நடிகரின் மிகப்பெரிய ரசிகை.. எதற்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது – அனஸ்வரா ராஜன்!

அவரை முதல் முறை சந்திக்கும்போது, நான் ஒரே ஒரு பாட்டு போட்டு காமிச்சேன், அதை கேட்டுட்டு அடுத்த நொடியே என்னிடம், நீ என்னோட அடுத்த படம் பண்ணிறியான்னு கேட்டாரு. அவர் அதை சொன்னதும் எனக்கு அப்படியே ஒரு நிமிடம் ஆடிபோய்ட்டேன். அவர் என்மீது வைத்த நம்பிக்கையால், எனக்கு என்மீது உள்ள நம்பிக்கை அதிகமாச்சு.” என அந்த நிகழ்ச்சியில் அவர் தெரிவித்திருந்தார்.

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Sai Abhyankkar (@abhyankkar)

அட்லீ மற்றும் அல்லு அர்ஜுனின் கூட்டணியில் உருவாகிவரும் AA22 படமானது பான் இந்திய மொழிகளில் உருவாகிவருகிறது. இப்படத்தில் தீபிகா படுகோ, ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவருகின்றனர். இதை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், வரும் 2027ம் ஆண்டு ஆரம்பத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது.

Follow Us