AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜி.வி.பிரகாஷின் ‘ஹேப்பி ராஜ்’ பட செகண்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!

Happy Raj Movie Second Song: தமிழில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இருப்பவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவரின் நடிப்பில் வித்தியாசமான கதையில் தயாராகியுள்ள படம்தான் ஹேப்பி ராஜ். இது இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும் நிலையில், தற்போது இதன் 2வது பாடல் எப்போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.வி.பிரகாஷின் ‘ஹேப்பி ராஜ்’ பட செகண்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ!
ஹேப்பி ராஜ் படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 09 Mar 2026 15:46 PM IST

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) நடிப்பில் தமிழில் இதுவரையில் பல படங்கள் வெளியாகியுள்ளது. சினிமாவில் இசையமைப்பாளராக வெயில் (Veyil) என்ற படத்தின் மூலம் நுழைந்த இவர், இதையடுத்து டார்லிங் (Darling) என்ற படத்தின் மூலம் கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் இசையமைப்பு, நடிப்பு மற்றும் தற்போது தயாரிப்பு பணியையும் தொடங்கியுள்ளார் என்றே கூறலாம். அந்த வகையில் இறுதியாக இவரின் நடிப்பில் பிளாக்மெயில் (Blackmail) என்ற படம் வெளியானது. இது மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அறிமுக இயக்குனர் மரியா ராஜா எலாஞ்சியன் (Maria Raja Elanchezian) இயக்கத்தில், நடித்துள்ள படம்தான் “ஹேப்பி ராஜ்” (Happy Raj). இப்படமானது வித்தியாசமான கதையில் தயாராகியுள்ள நிலையில், இதில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ கௌரி பிரியா (Sri Gouri Priya) நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள நிலையில், ஏற்கனவே, “ஆடினே இருப்பேன்” என்ற பாடல் வெளியானது. மேலும் தற்போது இதன் 2வது பாடல் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வரும் 2026 மார்ச் 10ம் தேதி மாலை 5 மணிக்கு, இரண்டாவது பாடலான “துரு துரு” (Thuru Thuru) வெளியாகிறது.

இதையும் படிங்க: அஜித் குமாரின் AK 64 படத்தை தயாரிப்பது அந்த பிரபல நிறுவனமா? வைரலாகும் தகவல்

ஹேப்பி ராஜ் பட இரண்டாவது பாடல் ரிலீஸ் குறித்த பதிவு:

ஹேப்பி ராஜ் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும்:

ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஸ்ரீ கௌரி பிரியா கூட்டணியில், ரோமெண்டிக் காதல் படமாக ஹேப்பி ராஜா தயாராகியுள்ளது. இது ஒரு காதலால் இரு குடும்பத்திற்கும் இடையே இருக்கும் பிரச்சனையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷின் தந்தையாக நடிகர் ஜார்ஜ் மரியானும், ஸ்ரீ கௌரி பிரியாவிற்கு தந்தையாக நடிகர் அப்பாஸும் நடித்துள்ளார். நடிகர் அப்பாஸ் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தெறிக்கவிடும் தாய் கிழவி படம் – வைரலாகும் தகவல்

இந்த படமானது வரும் 2026 மார்ச் 27ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. இதன் அப்டேட்டும் தொடர்ந்து வெளியாகிவருகிறது. மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுவருகிறது. இதன் காரணமாக வரும் 2026 மார்ச் 20ம் தேதி அல்லது 21ம் தேதியில், ஹேப்பி ராஜ் பட ட்ரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us