AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காதல் தோல்வியின் போது ரக்‌ஷித் ஷெட்டியின் படத்தைப் பார்த்து அழுதுவிட்டேன் – கென் கருணாஸ்

Ken Karunaas talks about Rakshit Shettys Sapta Sagaradaache Ello movie: கன்னட சினிமாவில் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் சப்த சாகரதாச்சே எல்லோர். இந்தப் படம் குறித்து கென் கருணாஸ் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

காதல் தோல்வியின் போது ரக்‌ஷித் ஷெட்டியின் படத்தைப் பார்த்து அழுதுவிட்டேன் – கென் கருணாஸ்
கென் கருணாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 09 Mar 2026 13:32 PM IST

கன்னட சினிமாவில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார் நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி. தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வந்த ரக்‌ஷித் ஷெட்டி தற்போது கன்னட சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து கன்னட சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான படம் சப்த சாகரதாச்சே எல்லோர் படம். இந்தப் படத்தில் நடிகை ருக்மினி வசந்த் நாயகியாக நடித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் தென்னிந்திய சினிமாவில் நடிகர் ரக்‌ஷித் ஷெட்டியை அதிக அளவில் பிரபலமாக்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தில் நடித்த பிறகே நடிகை ருக்மினி வசந்த் தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் மற்ற மொழிகளில் பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் காதல் தோல்வி அடைந்த நாயகன் தனது முன்னாள் காதலியின் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்ற என்ன எல்லாம் செய்கிறார் என்பதே படத்தின் கதை. இந்த நிலையில் இந்தப் படம் குறித்து கென் கருணாஸ் பேட்டி ஒன்றில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

காதல் தோல்வியில் ரக்‌ஷித் ஷெட்டியின் படத்தைப் பார்த்து அழுதுவிட்டேன்:

கென் கருணாஸ் எழுதி இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் யூத். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த நிலையில் கென் கருணாஸ் தொடர்ந்து பலப் பேட்டிகளை அளித்து வருகிறார். அப்படி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த சப்த சாகரதாச்சே எல்லோர் படம் பற்றி பேசியுள்ளார்.

கென் கருணாஸ் கூறியதாவது, சப்த சாகரதாச்சே எல்லோர் படத்தைப் பார்த்துவிட்டு அழுதேன். அந்த நேரத்தில் தான் எனக்கு காதல் தோல்வி ஏற்பட்டு இருந்தது. இதன் காரணமாக அந்தப் படம் என்னை மிகவும் பாதித்தது என்றும் அவர் பேட்டியில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… நாக சைத்தன்யா நடிப்பில் வெளியானது வ்ருஷகர்மா கிளிம்ஸ் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் கென் கருணாஸ் பேச்சு:

Also Read… ஆர்.ஜே.பாலாஜிக்கும், கருப்பு பட தயாரிப்பாளருக்கும் பிரச்சனையா? சுருக்கமாக பதில் கொடுத்த தயாரிப்பாளர்!

Follow Us