AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மீண்டும் பள்ளிக்கு போகலாம்… 68 வயதில் 7-ம் வகுப்பு தேர்வு எழுதிய பிரபல மலையாள நடிகர்!

Malayalam Actor Indrans Write 7th Grade Exam : மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் இந்திரன்ஸ். தனது 68-வது வயதில் நடிகர் இந்திரன்ஸ் 7-ம் வகுப்பு தேர்வை எழுதியது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

மீண்டும் பள்ளிக்கு போகலாம்… 68 வயதில் 7-ம் வகுப்பு தேர்வு எழுதிய பிரபல மலையாள நடிகர்!
நடிகர் இந்திரன்ஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Apr 2026 20:53 PM IST

மலையாள சினிமாவில் கடந்த 1980-களில் இருந்து நடிகராக வலம் வருகிறார் நடிகர் இந்திரன்ஸ். இவர் கடந்த 1981-ம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான சூதாட்டம் என்ற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகம் ஆனார். அதன்படி மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆன ஆரம்ப காலக்கட்டத்தில் தொடர்ந்து சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார் நடிகர் இந்திரன்ஸ். அதனைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் காமெடி கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார் நடிகர் இந்திரன்ஸ். தொடர்ந்து காமெடி கதாப்பாத்திரங்கள் மட்டும் இன்றி அனைத்து விதமான வேடங்களையும் ஏற்று சுமார் 100 படங்களுக்கு மேல் மலையாள சினிமாவில் நடித்துள்ளார். இவர் மலையாள சினிமாவில் 100 படங்களுக்கு மேல் நடித்து இருந்தாலும் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே இவரை பிரபலமாக்கியது என்னவோ கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ஹோம் எனற படம் தான்.

இந்தப் படத்தில் நடிகர் இந்திரன்ஸ் கதாப்பாத்திரம் படத்தின் முக்கியமான கதாபபாத்திரமாக இருந்தது. இந்தப் படத்திற்கு பிறகு மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் பிரபலமாக இருந்த நடிகர் இந்திரன்ஸ் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையேயும் பிரபலம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

68 வயதில் 7-ம் வகுப்பு தேர்வு எழுதிய பிரபல மலையாள நடிகர்:

படிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை இந்த சமூகத்தில் பலரும் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்கள். அந்த வகையில் நடுநிலைப்பள்ளியை கூட தாண்டாத நடிகர் இந்திரன்ஸ் தனது 68-வது வயதில் 7-ம் வகுப்பு தேர்வை எழுதி உள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் பலரும் நடிகர் இந்திரன்ஸின் இந்த முயற்சிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இது தற்போது ரசிகர்களுக்கு உந்துதலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… Hi Movie: நயன்தாரா – கவினின் ‘ஹாய்’ படத்தின் முதல் பாடலை பாடிய ஜி.வி.பிரகாஷ் – காமெடியாக வெளியான புரோமோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஆர்.ஜே. பாலாஜியின் காமெடி நிறைந்த சிங்கப்பூர் சலூன் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்? அப்டேட் இதோ

Follow Us