AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Demonte Colony 3: ரத்தத்த தா.. டிமாண்டி காலனி 3 பட ஃபர்ட்ஸ் சிங்கிள் வெளியானது!

Rathatha Tha song: கோலிவுட் சினிமாவில் தனது வித்தியாசமான கதைக்களத்தை மூலம் மக்களை கவர்ந்துவருபவர் அஜய் ஞானமுத்து. இவரின் இயக்கத்திலும், நடிகர் அருள்நிதியின் நடிப்பிலும் 3வது பாகமாக உருவாகியுள்ளதுதான் டிமாண்டி களனி 3. இப்படத்தின் முதல் பாடலான ரத்தத்த தா என்ற பாடல் வெளியானது.

Demonte Colony 3: ரத்தத்த தா.. டிமாண்டி காலனி 3 பட ஃபர்ட்ஸ் சிங்கிள் வெளியானது!
ரத்தத்த தா பாடல் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 03 Aug 2026 18:10 PM IST

இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் (Ajay Gnanamuthu) இயக்கத்தில், மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள புது திரைப்படம்தான் டிமாண்டி காலனி 3 (Demonte Colony 3). இந்த படத்தில் அருள்நிதி (Arulnithi) ஹீரோவாக நடிக்க, அவருடன் பிரியா பவானி ஷங்கர் (Priya Bhavani Shankar) முக்கிய நாயகியாக நடித்துள்ளார். இந்த படமானது 2024ம் ஆண்டில் வெளியான டிமாண்டி காலனி 2 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. டிமாண்டி காலனி 3 பட ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு இறுதிமுதல் தொடங்கிய நிலையில், சென்னை மற்றும் வெளிநாடுகளிலும் நடைபெற்றுவந்தது. இந்த படத்தில் அருள்நிதி ரெட்டை வேடத்தில் நடித்துள்ளார். இப்படமானது தமிழில் பல ஆண்டுகளுக்கு பின் வெளியாகும் சிறப்பான ஹாரர் கதைக்களம் கொண்ட படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த விதத்தில் இதன் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ள நிலையில், தற்போது முதல் பாடல் வெளியாகியுள்ளது. “ரத்தத்த தா” (Rathatha Tha) என்றார் லிரிக்கள் வீடியோ பாடல் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இதையும் படிங்க: டாக்ஸிக் படத்திற்கு எதிரான கருத்துகள்… நடிகை ஹூமா குரேசி பேச்சு

டிமாண்டி காலனி 3 படத்தின் முதல் பாடலான ரத்தத்த தா குறித்த எக்ஸ் பதிவு:

டிமாண்டி காலனி 3 படத்தில் முக்கிய வேடத்தில் இணைந்த பிரபலம் :

டிமாண்டி காலனி 3 படமானது பயங்கரமான ஹாரர் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அருள்நிதி, பிரியா பவனி ஷங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் குரு சோமசுந்தரம் போன்ற நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் மிகவும் முக்கியமான் லைபிரேரியனாக நடிகர் குரு சோமசுந்தரம் இணைந்துள்ளார். அதனால் டிமாண்டி காலனி 3 படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது.

இதையும் படிங்க: வாரணாசி பட ஷூட்டிங் 80 சதவீதம் ஓவர் – இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி கொடுத்த அப்டேட்!

டிமாண்டி காலனி 3 படத்துடன் மோதும் படங்கள்:

அருள்நிதியின் டிமாண்டி காலனி 3 படமானது வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் வெளியாகவேயுள்ள நிலையில், இப்படத்துடன் தமிழில் சூரி நடித்துள்ள மண்டாடி படம் வெளியாகிறது. மேலும் விஜய் தேவரகொண்டா நடித்துவரும் பான் இந்திய படமான ரணாபாலி திரைப்படமும் செப்டம்பர் 11ம் தேதியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தகக்கத்து.

Follow Us