Yash: ராமாயணா படத்தின் விஎஃப்எக்ஸ்.. ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த யாஷ்!
Yash Appeals To Fans: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் யாஷ். இவரின் நடிப்பில் ராமாயணா திரைப்படமானது மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ராமாயணா திரைப்படத்தின் தெலுங்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சியானது நடைபெற்றிருந்தது. அதில் பேசிய யாஷ் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
பான் இந்திய சினிமா அளவிற்கு மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம்தான் ராமாயணா: பார்ட் 1 (Ramayana: Part 1). இந்த படத்தை பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி (Nitesh Tiwari) இயக்கியுள்ளார். இந்த படமானது இந்து மக்களின் புராண கதையின் ராமாயணம் படத்தின் கதையை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராமனாக ரன்பீர் கபூர் (Ranbir Kapoor) நடித்துள்ளார், சீதையாக நடிகை சாய் பல்லவி (Sai Pallavi) நடிக்க, ராவணனாக நடிகர் யாஷ் நடித்துள்ளார். கன்னட சினிமாவில் யாஷ் (Yash) முன்னணி நாயகனாக இருந்துவரும் நிலையில், இவர் இந்தியில் முதல் முறையாக இணைந்த படம்தான் இந்த ராமாயணா. இந்த படத்தில் யாஷ் சக்திவாய்ந்த ராவணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் தெலுங்கு ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
அந்த விதத்தில் நேற்று (19/10/2026) இதன் தெலுங்கு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது. அந்த நிகழ்ச்சியின்போது பேசிய யாஷ் ராமாயணா படத்தின் VFX குறித்து ரசிகர்களிடையே வேண்டுகோள் வைத்துள்ளார். அது குறித்து விவரமாக தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: வாரணாசி படத்தின் ஷூட்டிங்கில் அது பெரிய சவாலாக இருந்தது – இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி பேச்சு!
ராமாயணா திரைப்படத்தின் VFX குறித்து ரசிகர்களிடையே வேண்டுகோள் வைத்த யாஷ்:
சமீபத்தில் ராமாயணா பட தெலுங்கு ப்ரீ ரிலிஸ் நிகழ்ச்சியின்போது பேசிய யாஷ் அதில், “தயவுசெய்து ராமாயணா படத்தின் விஎஃப்எக்ஸில் உள்ள சிறு தவறுகளில் கவனம் செலுத்தாதீர்கள். திறந்த மனதுடன் படத்தைப் பார்த்து, ஒவ்வொரு துறையின் முயற்சிகளையும் பாராட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என அந்த நேர்காணலில் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ராமாயணா திரைப்படம் குறித்து நடிகர் யாஷ் பேசியதாக வைரலாகும் எக்ஸ் பதிவு:
#Yash at #Ramayana Telugu PreRelease Event
– Please don’t focus on the small mistakes in the VFX. I request you to watch the film with an open mind and appreciate the efforts of every industry.
#Toxic https://t.co/VFxdgozEqb— Movie Tamil (@_MovieTamil) October 20, 2026
ராமாயணா திரைப்படத்தில் யாஷ் ராவணனாக நடித்துள்ள நிலையில், இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக வரவேற்புகள் இருந்துவருகிறது. இந்த படமானது ரூ 8000 கோடி பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், படமானது மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டோரதி படத்தின் 25வது நாள்.. இன்ட்ரவல் சண்டை மேக்கிங் வீடியோவை வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்!
இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. தீபாவளியை முன்னிட்டு இப்படமானது வெளியாக காத்திருக்கும் நிலையில், மிக பிரம்மாண்டமான வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.