AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Jiiva: காதல் கசக்குது… ஜீவாவின் ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தின் 2வது பாடல் வெளியானது!

Kaadhal Kasakuthu Song: நடிகர் ஜீவாவின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதிய திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் SMS பட இயக்குநர் ரமேஷின் இயக்கத்தில், இவர் நடித்துவந்த திரைப்படம்தான் ஜாலியா இருந்த ஒருத்தன். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இப்படத்திலிருந்து காதல் கசக்குது என்ற 2வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Jiiva: காதல் கசக்குது… ஜீவாவின் ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தின் 2வது பாடல் வெளியானது!
காதல் கசக்குது பாடல் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 19 Oct 2026 21:08 PM IST

தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழி சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஜீவா (Jiiva). இவரின் நடிப்பில் தமிழ் மொழியில் தொடந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுவருகிறது. இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் தலைவர் தம்பி தலைமையில் (TTT Movie). இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சினிமாவில் வெளியாகியிருந்தது. கலக்கல் காமெடி மற்றும் அரசியல் பாணியில் இந்த படமானது வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் தமிழில் ஜீவா ஒப்பந்தமான திரைப்படம்தான் ஜாலியா இருந்த ஒருத்தன் (JIO: Jolliya Iruntha Oruthan ). இந்த படத்தை சிவா மனசுல சக்தி (SMS Movie) என்ற படத்தை இயக்கி ஹிட் கொடுத்த இயக்குநர் எம்.ராஜேஷ் (M Rajesh) இயக்கியுள்ளார்.

இந்த படமானது சிறப்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுவரும் இலையில், இதில் ஜீவாவுக்கு ஜோடியாக லவ் டுடே பட பிரபல நடிகை இவனா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திலிருந்து ஏற்கனவே முதல் சிங்கிள் வெளியான நிலையில், தற்போது “காதல் கசக்குது” (Kaadhal Kasakuthu) என்ற 2வது பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜூனியர் என்டிஆர் இல்ல.. நெல்சன் இணையும் அடுத்த நடிகர் இவரா?

ஜீவாவின் ஜாலியா இருந்த ஒருத்த படத்தின் 2வது பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த ஜாலியா இருந்த ஒருத்தன் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசையானது சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில் தற்போது இப்பாத்திலிருந்து “காதல் கசக்குது” என்ற 2வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இன்று (19/10/2026) ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இந்த பாடலை படக்குழு பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: அவன் தூக்குனா நானும் தூக்குவேன்.. சாப்பாட்டுக்காக டிடிஃஎப் வாசனுடன் மோத நினைக்கும் லக்ஷ்மி பிரியா!

ஜாலியா இருந்த ஒருத்தன் திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்:

இந்த ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தில் ஜீவா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை இவனா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கியாயமான் வேடத்தில் பரிதாபங்கள் சுதாகர் நடித்துள்ளார். இந்த படமானது காதல் தோல்வி மற்றும் விறுவிறுப்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு உள்ளது. அந்த விதத்தில் இப்படத்தை வரும் 2026ம் ஆண்டு நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் தொடக்கத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us