AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

OTT Movie: கிராமத்து ரோடு வளைவில் இருக்கும் யக்ஷி.. திக் திக் காட்சிகளுடன் கூடிய இந்த மலையாள படத்தை பார்த்திருக்கீங்களா?

Malayalam Horror Movie: மலையாளம் சினிமாவில் பொதுவாகவே வித்தியாச வித்தியாசமான கதைக்களங்களில் படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் மிகவும் வித்தியாசமான மற்றும் திக் திக் காட்சிகளுடன் உள்ள சுமதி வளவு என்ற படத்தைப் பார்த்திருக்கீங்களா?. எந்த ஓடிடியில் உள்ளது என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

OTT Movie: கிராமத்து ரோடு வளைவில் இருக்கும் யக்ஷி.. திக் திக் காட்சிகளுடன் கூடிய இந்த மலையாள படத்தை பார்த்திருக்கீங்களா?
சுமதி வளவு திரைப்படம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 03 May 2026 19:39 PM IST

தென்னிந்திய சினிமாவிலே மக்கள் மத்தியில், வித்தியாசமான மற்றும் பீல் குட் கதைக்களங்களை கொடுக்கும் சினிமாவாக இருப்பது மலையாளம் சினிமாதான் (Malayalam Movie). இந்த சினிமாவில் ஹாரர் திரைப்படங்களாக இருந்தாலும் சரி, பீல் குட் திரைப்படங்களாக இருந்தாலும் சரி படங்கள் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவரும். அந்த வகையில் மலையாளத்தில் கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகி, சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த ஹாரர் திகில் திரைப்படம்தான் சுமதி வளவு (Sumathi Valavu). இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் அசோகன் (Arjun Ashokan) நாயகனாக நடித்திருந்தார். மேலும் அவருக்கு ஜோடியாக ஜோ பட (Joe) நடிகை மாளவிகா மனோஜ் (Malavika Manoj) நடித்திருந்தார். மேலும் இதில் நடிகர்கள் ஷிவதா, பள்ளு வர்கீஸ் போன்ற பிரபலங்களும் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த படமானது ஒரு வித்தியாசமான ஹாரர் கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. இப்படமானது வெளியாகி தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் இப்படம் எந்த ஓடிடியில் உள்ளது, மற்றும் கதைக்களம் எப்படி இருக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க:  ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவின் குயின்.. தற்போது ஒரு குழந்தைக்கு தாய்.. இந்த போட்டோவில் இருக்கும் சிறுமி எந்த நடிகை தெரியுமா?

கிராமத்து ரோட்டு வளைவில் மக்களை தாக்கும் அமானுஷ்யம் :

இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் அசோகன் “அப்பு” என்ற வேடத்திலும், நடிகை மாளவிகா மனோஜ் “பாமா” என்ற வேடத்திலும் நடித்துள்ளார். இப்படமானது ஒரு கட்டுக்குள் இருக்கும் சாதாரண கிராமத்திலிருந்து தொடங்கும். அந்த கிராமத்திற்கு உள்ள, ரோடு வளைவு ஒன்றில் சுமதி என்ற யக்ஷி (பேய்) இருப்பதாக கிராம மக்கள் நம்புகின்றனர். இரவு 8 மணிக்கும் மேல் அந்த வளைவில் சென்ற யாரும் உயிருடன் திரும்பியதில்லை. அந்த வகையில் அப்பு மட்டுமே அந்த வளைவிற்கு சென்று மீண்டும் திரும்பி வந்தவர். அதனால் இவரை கிராம மக்கள் அனைவரும் வித்தியாசமாக பார்ப்பதுண்டு.

இதையும் படிங்க:  18 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள மம்முட்டி – மோகன்லால்… எப்படி இருக்கு பேட்ரியாட் படம்? எக்ஸ் விமர்சனம் இதோ!

ஒருமுறை கர்ப்பிணி பெண் ஒருவருக்கு இரவில் பிரசவ வலி வருகிறது, அவரை அந்த கிராம மக்கள் ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றே ஆகவேண்டும். அப்போது கொண்டு செல்லும்போது அந்த சுமதி வளைவில் மாட்டி கொள்கின்றனர். அந்த கர்ப்பிணி என்ன ஆனார்?, அந்த சுமதி பேய் அப்புவை தப்பிக்க விட்டதற்கான காரனம் என்ன என்பதே இப்படத்தின் மீதி கதையாகும். திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ஓடிடியில் உள்ளது.

அர்ஜுன் அசோகனின் சுமதி வளவு பட ட்ரெய்லர் குறிக பதிவு:

சுமதி வளவு படம் எந்த ஓடிடியில் உள்ளது:

இந்த சுமதி வளவு திரைப்படமானது ஜீ5 என்ற ஓடிடியில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் கிடைக்கிறது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் 14 நிமிடம் கொண்ட ஹாரர் மற்றும் பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும். நிச்சயம் குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஏற்ற திரைப்படமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us