AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அப்பா – மகன் இடையே இருக்கும் ஈகோ… இறுதியில் வென்றது யார்? மலையாள சினிமாவில் வெளியாகி உள்ள ஆஷகள் ஆயிரம் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

Ashakal Aayiram Movie OTT Update: மலையாள சினிமாவில் வெளியாகும் ஃபேமிலி செண்டிமெண்ட் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் தற்போது மலையாள சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற ஆஷகள் ஆயிரம் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. அந்தப் படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

அப்பா – மகன் இடையே இருக்கும் ஈகோ… இறுதியில் வென்றது யார்? மலையாள சினிமாவில் வெளியாகி உள்ள ஆஷகள் ஆயிரம் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
ஆஷகள் ஆயிரம் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Apr 2026 21:23 PM IST

மலையாள சினிமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் ஆஷகள் ஆயிரம். ஃபேமிலி செண்டிமெண்ட் காமெடி பாணியில் உருவாகி உள்ள இந்தப் படத்தை இயக்குநர் ஜி.பிரஜித் இயக்கி இருந்தார். மேலும் திரைக்கதையை ஜூட் ஆண்டனி ஜோசப் மற்றும் அரவிந்த் ராஜேந்திரன் இணைந்து எழுதி இருந்தனர். மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் ஜெயராம் மற்றும் காளிதாஸ் ஜெயராம் இருவரும் இணைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாக நடித்து உள்ளனர். அப்பா மற்றும் மகன் இருவரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடித்ததை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இவர்களுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் ஆஷா சரத், ஷரஃப் யு தீன், இஷானி கிருஷ்ணா, ஆனந்த் மன்மதன், அகில் என்ஆர்டி, ரமேஷ் பிஷாரடி, திலீப் மேனன், ஜின்ஸ் ஷான் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பாக தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி இருவரும் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் சனல் தேவ் இசையமைத்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஓடிடியில் வெளியாகி உள்ள ஆஷகள் ஆயிரம் படம் எப்படி இருக்கு?

மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்த ஜெயராம் மெடிக்கல் ரெப்பாக வேலை செய்து தனது குடும்பத்தை பார்த்து வருகிறார். இவரது மனைவியாக நடிகை ஆஷா குடும்பத்தை தனது கணவரி சம்பளத்திற்குள் பார்த்து வருகிறார். மேலும் மகன் காளிதாஸ் எந்த வேலைக்கும் செல்லாமல் சினிமாவில் நாயகனாக் நடிப்பதற்காக வெட்டியாக சுற்றி வருகிறார்.

Also Read… சினிமாவில் 26 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குநர் பூரி ஜெகன்நாத்… நெகிழ்ந்து பேசிய விஜய் சேதுபதி!

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஜெயராமிற்கு எதிர்பாராத விதமாக நடிகராக ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அது அவரது மகன் காளிதாஸிற்கு பொறாமையாக உள்ளது. மெடிக்கல் ரெப் வேலை பரிபோக தொடர்ந்து நடிகராக நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். இறுதியில் யார் பெரிய நடிகராக மாறினர் வாழ்க்கை அவர்களை எந்த இடத்திற்கு எடுத்துச் செல்கிறது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… அட்லி மற்றும் பிரியா தம்பதிக்கு இரண்டாது குழந்தை பிறந்தது – வைரலாகும் போஸ்ட்

Follow Us