AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் என்ன என்ன?

Thaimaman Gold Ring Scheme | தமிழக வெற்றிக் கழக அரசு விரைவில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற தகுதிகள் என்ன, சமர்ப்பிக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் என்ன என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Jul 2026 20:15 PM IST

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், செப்டம்பர் 15, 2026 முதல் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் பயன்பெற தேவையான ஆவணங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வரும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்?

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டம் செப்டம்பர் 15 அன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட இருந்தாலும் ஜூன் 22, 2026 முதலே குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது முதலமைச்சர் சி.ஜோசப் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 முதலே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : சவூதி அரேபியாவின் பக்கா மூவ்.. கச்சா எண்ணெய் விலையில் சரிவு.. இந்தியாவுக்கு என்ன பலன்?

தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் என்ன என்ன?

இந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் பயன்பெற தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளன.

  • தங்க மோதிரத்தை பெற குழந்தை அரசு மருத்துவமனையில் பிறக்க வேண்டும். தனியார் மருத்துவமனையில் பிறக்கு குழந்தைக்கு மோதிரம் வழங்கப்படாது.
  • குழந்தையின் பெற்றோர் நிரந்தரமாக தமிழகத்தில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.
  • ஜூன் 22, 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த அனைத்து குழந்தைகளும் இந்த திட்டத்தில் தங்க மோதிரம் பெற தகுதியானவர்கள் ஆவார்கள்.

இதையும் படிங்க : Gold : விலை குறையும் தங்கம்.. நகைக் கடன் வாங்கியவர்களுக்கு நல்லதா, கெட்டதா?

குழந்தை பிறந்த உடன் சம்மந்தப்பட்ட அரசு மருத்துவமனை நிர்வாகமே குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோரின் ஆவணங்களை பெற்று இந்த திட்டத்திற்கு பதிவு செய்யும். எனவே, பெற்றோர்கள் வெளியே விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த திட்டத்திற்கு கர்ப்பத்தின் போதே அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்ய வேண்டும் என்பதால் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை அப்போதே வழங்க வேண்டும். எனவே குழந்தை பிறந்த பிறகு எந்தவித ஆவணத்தையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us