EPFO : இபிஎஃப்ஓவில் வந்த புது ரூல்ஸ்.. ரூ.1,800 விதி என்றால் என்ன?.. ஊழியர்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும்!
What is 1800 Rules In New EPFO 2026 Scheme | 1952 ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்த ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் மாற்றம் செய்யப்பட்டு, புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ.1,800 விதி என்றால் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான வரப்பிரசாதமாக உள்ள திட்டம் தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization). காரணம், இந்த திட்டம் ஊழியர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் சேவைகளை வழங்குகிறது. குறிப்பாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் மூலம் ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு பிஎஃப் (PF – Provident Fund) கணக்கில் வரவு வைக்கப்படும். அந்த பணத்திற்கான வட்டியும் அரசால் வழங்கப்படும். இந்த பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களது தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி விதிகளில் மாற்றம்
2026, ஜுன் மாதம் வரை 1952 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டம் தான் அமலில் இருந்தது. இந்த நிலையில், தற்போது புதிய ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் மிக முக்கிய விதியாக 1,800 விதி உள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : ஹெல்த் இன்சூரன்ஸ்: உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
புதிய இபிஎஃப்ஓ திட்டம் – ரூ.1,800 விதி என்றால் என்ன?
இந்த புதிய ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சில முக்கிய புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த விதிகளை பிஎஃப் பயனர்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.
ஒரு ஊழியர் சம்பளம் மற்றும் நிறுவனம் சார்பில் செலுத்த வேண்டிய பங்களிப்புக்கான அளவு 12 சதவீதமாகவே தொடர்கிறது. இந்த நிலையில், புதிய விதியின்படி சட்ட ரீதியான ஊதிய வரம்பான ரூ.15,000-க்கு 12 சதவீதம் என்ற வகையில் பிஎஃப் பங்களிப்பு கணக்கிடப்படுகிறது. இதன் மூலம், ஒரு மாதத்திற்கு அந்த ஊழியரின் கணக்கில் இருந்து ரூ.1,800 பங்களிப்பு செல்ல வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : விவசாயிகளுக்கு குட் நியூஸ்.. வெங்காயத்தின் கொள்முதல் விலையை உயர்த்திய மத்திய அரசு!
அதாவது, ரூ.1,800-க்கு குறைவாக பங்களிப்பு செலுத்த முடியாது. குறைந்தபட்சம் மாதம் ரூ.1,800 ஆவது பங்களிப்பு செலுத்தப்பட்ட வேண்டும் என்பதை இந்த புதிய விதி வலியுறுத்திகிறது. இதனை தான் ரூ.1,800 விதி என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.



