AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாகனங்களின் இன்ஜினை பழுதாக்கும் E20 பெட்ரோல்?.. மத்திய அரசு விளக்கம்!

Will E20 Petrol Damage Vehicle's Engine | கச்சா எண்ணெய் சிக்களுக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு எத்தனால் கலந்த இ20 பெட்ரோலை அறிமுகம் செய்தது. இந்த பெட்ரோலை பயன்படுத்துவதால் வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என வதந்தி பரவிய நிலையில், மத்திய அரசு அதற்கு விளக்கம் அளித்துள்ளது.

வாகனங்களின் இன்ஜினை பழுதாக்கும் E20 பெட்ரோல்?.. மத்திய அரசு விளக்கம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 04 Jul 2026 15:03 PM IST

இந்தியா தனது பெட்ரோல் மற்றும் டீசல் தேவைகளுக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் கச்சா எண்ணெயை தான் பெரிய அளவில் நம்பியுள்ளது. இதன் காரணமாக, தொடர்ந்து கடுமையான சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தான், கச்சா எண்ணெய் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் எத்தனால கலந்த இ20 பெட்ரோலை (E20 Petrol) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பெட்ரோல் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், அதனை பயன்படுத்துவது வாகனங்களை சேதப்படுத்தும் என சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தான் அது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஈரான் போரால் கடும் சவால்களை எதிர்க்கொண்ட இந்தியா

இந்தியா தனது பெட்ரோல், டீசல் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள கச்சா எண்ணெய் பெற வளைகுடா நாடுகளையே பெரிய அளவில் நம்பியிருந்தது. இந்த நிலையில் தான், ஈரான் போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டபோது வளைகுடா நாடுகளில் இருந்து வரும் கச்சா என்ணெயை பெற முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக வேறு சில நாடுகளில் அதிக விலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்கும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது. அதன் விளைவாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை சந்தித்தது. இந்த நிலையில் தான் கச்சா எண்ணெய்க்காக உலக நாடுகளை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற எத்தனால் கலந்த இ20 பெட்ரோலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

இதையும் படிங்க : இனி கூடுதலாக பணம் செலுத்தலாம்… வந்தாச்சு புதிய பிஎஃப் திட்டம் – ஊழியர்களுக்கு என்ன மாற்றம்?

இ20 பெட்ரோல் வாகனங்களுக்கு ஆபத்தானதா – அரசு விளக்கம்

இ20 பெட்ரோல் பயன்படுத்துவதால் வாகனங்களின் இன்ஜின் பழுதடைவது, மைலேஜ் பெருமளவு குறைவது மற்றும் இன்சூரன்ஸ் கிடைக்காமல் போவது உள்ளிட்ட வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வந்தன. இந்த நிலையில், அது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, இ20 பெட்ரோலால் இன்ஜின் பழுதடையும் என்ற குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது. ARAI மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நவீன வாகனங்களில் இ20 பயன்பாட்டால் எந்த விதமான தொழில்நுட்ப பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதி செய்துள்ளது.

இதையும் படிங்க : வருமான வரி தாக்கல் செய்ய போறீங்களா? புதியதாக கார் வாங்கி இருந்தால் உங்களுக்கு ரூ.10,000.. இத தெரிஞ்சுக்கோங்க!

இந்த நிலையில் , மிக பழைய வாகனங்களில் உள்ள சில ரப்பர் பாகங்களை முன்னதாகவே மாற்ற வேண்டிய தேவை இருக்கலாம் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us