AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் முதலீடு செய்ய போறீங்களா?.. சமீபத்திய வட்டி விகிதங்கள தெரிஞ்சுக்கோங்க!

Post Office Schemes Interest Rates | அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், 2026 ஜூலை முதல் செப்டம்பர் காலக்கட்டத்திற்கு இந்த திட்டங்களுக்கு எவ்வளவு வட்டி விகிதம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் முதலீடு செய்ய போறீங்களா?.. சமீபத்திய வட்டி விகிதங்கள தெரிஞ்சுக்கோங்க!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 02 Jul 2026 12:16 PM IST

பொருளாதாரத்தை பாதுகாக்க வேண்டும், பல மடங்கு உயர்ந்த வேண்டும் என்றால் சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய வேண்டும் என்பது அவசியமாக உள்ளது. இதற்காக தான் அரசு அஞ்சலங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் முதலீடு செய்து ஏராளமான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில், அஞ்சலங்கள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அஞ்சலக திட்டங்களுக்கான சமீபத்திய வட்டி விகிதங்கள்

அஞ்சக திட்டங்களுக்கான ஜூலை முதல் ஆகஸ்ட் காலக்கட்டத்திற்கான வட்டி விகிதங்கள் வெளியாகியுள்ளது.

  • பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் (PPF – Public Provident Fund) – இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
  • மூத்த குடிமக்கள் சேமிப்பு சான்றிதழ் திட்டம் (SCSS – Senior Citizen Saving Certificate) – இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
  • சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் (SSY – Sukanya Samriddhi Yojana) – இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
  • தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் (NSC – National Saving Certificate) – இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
  • மாத வருமான திட்டம் (POMIS – Post Office Monthly Income Scheme) – இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
  • கிசான் விகாஸ் பத்ரா திட்டம் (KVP – Kisan Vikas Patra) – இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது.. எவ்வளவு தெரியுமா?

டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள்

  • 1 ஆண்டுக்கான டெபாசிட் திட்டத்திற்கு 6.9 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
  • 2 ஆண்டுகளுக்கான டெபாசிட் திட்டத்திற்கு 7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
  • மூன்று ஆண்டுகளுக்கான டெபாசிட் திட்டத்திற்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
  • ஐந்து ஆண்டுகளுக்கான டெபாசிட் திட்டத்திற்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : மத்திய அரசின் சேமிப்பு திட்டங்கள் – வட்டி விகிதத்தில் மாற்றம்? வெளியான தகவல்

2026 ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான கால்கட்டத்திற்கு வட்டி விகிதங்கள் மாற்றம் செய்யப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us